பக்கம்:தம்பியர் இருவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தம்பியர் இருவர்

அவ்வாறாயின், ஏன் இப்பொழுது மட்டும் குகன் காவல் பூண வேண்டும்? ஈண்டு இருத்தி, என்றுதான் இராமன் ஏவினானோ தவிரக் காவல் பூண்டு நிற்க வேண்டும்' என்று குறிப்பாகக்கூட அவன் தெரிவிக்கவில்லையே! எனவே, குகன் இவ்வாறு நின்றதற்குத் தக்கதொரு காரணம் இருந்திருக்க வேண்டும். இக்காரணம் யாதாய் இருக்கலாமென்று வைணவப் பெரியார்கள் நன்கு ஆராய்ந்து பல முடிபுகளைக் கூறியுள்ளார்கள். அவற்றுட் சில இங்கு நோக்கற்குரியன:

"இளைய பெருமாளை ரீ குகப்பெருமாள் அதிசங்கை

பண்ண, இருவரையும் அதிசங்கை பண்ணி பூ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்றிரே! ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவழகுபடுத்தும் பாடா யிற்று இது,' என்கிற பூரீ வசன பூஷணம் இங்கு நோக்கற் குரியது. இவ்வாக்கியம், இராமனுக்கு இலக்குவனால் யாது தீங்கு நிகழுமோ என்ற ஐயத்தால் குகன் தான் காவல் மேற்கொள்ளவும், இராமனுக்குக் குகன் இலக்குவன் என்ற இருவராலும் எத்தீங்கு நேருமோ என ஐயுற்றுக் குகனுடைய சுற்றத்தார் காவல் புரிந்தனர்.’’ என்னும் பொருள் தருகிறது. இவ்வாறு கூற ஒரு காரணமும் கூறப் படுகிறது அதே அடியில். 'இராமனுடைய வடிவழகில் ஈடுபட்டவர் எவ்வாறாயினும் அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அதே நோக்குடன் வாழ்கின்றனர்.' என்ற காரணம் ஆய்தற்குரியது. இது வரை உடனிருந்த இலக்குவனை ஐயுற்றுக் குகன் தான் காவல் புரிந்தான் என்று கம்பநாடன் கூறவில்லை. கம்பநாடன் பாடல் இவ்வாறு பொருள் கூற இடந்தருகிறதா என்று ஐயப்பட வேண்டியுளது. -

'தும்பியின் குழாத்திற் சுற்றும்

சுற்றத்தன்; தொடுத்த வில்லன்

வெம்பிவெந்து அழியா கின்ற

நெஞ்சினன்; விழித்த கண்ணன்