பக்கம்:தம்பியர் இருவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 7

இலக்குவனுக்குக் கண்ணிர் ஆறாகப் பெருகுகிறது. இந் நிலையில் குகன் நாடு விட்டுக் காடு வந்த வரலாற்றை வினவுகிறான். -

இவ்வினாவை இராம இலக்குவர் என்ற இருவர் மாட்டும் குகன் பொதுவாக வினவினாலும், இலக்குவனே விடை கூறத் துணிந்தான். காடு வருவதற்கான காரணத்தை இலக்குவன் கூறியதைக் கேட்ட குகன், மிக்க துன்பம் அடைந்து, கண்ணிர் பெருக்கினான். ஆனால், யார் மீதும் குற்றம் கூற அவனுடைய பண்பாடு இடம் தரவில்லை. கைகேயியையோ, பரதனையோ கொடுமை செய்தவர் என்று கூற அவன் துணியவில்லை. எனவே, தனது வருத்தம் முழுவதையும் வெளிப்படுத்தும் முறையில் 'பெருநிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்!” என்று கூறினான். நிலமகள் இராமன் இவண் வந்து பிறக்கக் கொடுத்துவைத்துங்கூட அவனால் ஆளப்படக் கொடுத்து வையாமல் போனது வருந்தத்தக்கது என்பான் போல இவ்வாறு கூறினான்.

இராமன் படுத்திருக்கும் நிலையில் துயில் துறந்த வீரனாகிய இலக்குவன், நயனம் இமைப்பிலனாகக் கங்குல் எல்லை காண்பளவும் நிற்கின்றான். தம்பி என்னும்படி யன்று; அடியரின் ஏவல் செய்தி,' என்று அவனுடைய தாய் இட்டகட்டளையும், அவன் மனத்தில் கொண்டிருக் கும் குறிக்கோளும் ஒன்றாகலின், இலக்குவன் இவ்வாறு காவல் காத்தது முறையே. ஆனால், அப்போதுதான் இராமனுடைய நட்பைப் பெற்ற குகன் ஏன் காவல் புரிய வேண்டும்? இராமனிடத்துக் குகன் எத்தகைய அன்பு கொண்டான் என்பதை நன்கு அறிந்தால்தான் இதற்கு விடை கூற முடியும். இலக்குவனைக் காணு முன்னர் இராமனும் இலக்குவனும் ஒன்றாகவே இருந்தனர். அப்பொழுதும் இலக்குவன் இவ்வாறு காவல் பூண்டு நின்றானா என்பதுகூடக் குகனுக்குத் தெரியாது.

த.-2 - .