பக்கம்:தம்பியர் இருவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தம்பியர் இருவர்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்னோய்போற் போற்றாக் கடை? (திரு. 315)

கல்வியறிவிலனேனும் உண்மையறிவுடையவன் குகன்.

இதனை இராமன் நன்கு அறிந்துகொள்கிறான். உடனே தன் மனைவியை ஒரு முறையும் இளவலை ஒரு முறையும் நோக்கினான். உடனே தன் கண்கள் மூலமாகக் குகனுடைய அன்பை உலர்ந்து கொண்ட குறிப்பைக் காட்டினானாம் அக்கமலக் கண்ணன்.

கோதைவில் குரிசில் அன்னான் கூரிய கொள்கை

- - கேட்டான்; சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக் காதலன் ஆகும்,' என்று கருணையின் மலர்ந்த கண்ணன், "யாதினும் இனிய கண்ப! இருத்திஈண்டு எம்மொடு,'

என்றான். - - (கம்பன்-1870) வாயால் வெளியிடாத அன்பே மிக உயர்ந்தது", என்ற பழமொழிப்படி போலுய், இராமன் தன் கருணையை வாய் விட்டுக் கூறாமல், கண்களில் தெரியக் காட்டி அமைந்து விட்டான்! எனினும், அவனுடைய விளி, இதற்கு ஈடு செய்வதாய் அமைந்துவிட்டது. யாதினும் இனிய நண்ப, என்ற விளியிலேதான் எவ்வளவு அன்பைச் சொரிந்து விடுகிறான் இராமன்! -

இராமனுடைய இந்த அன்புரைகளால் மிகுதியும் இன்பம் அடைந்த குகன், தன் சுற்றத்தாரை இராமன் தங்கிய பள்ளியைச் சுற்றிக் காவலுக்கு நிறுத்திவிட்டான்; தானும் நாண் ஏற்றிய வில்லுடனும் அம்புடனும் காவல் செய்யத் தொடங்கிவிட்டான். இராமனும் சீதையும் வெறுந்தரையில் படுத்திருக்கும் பான்மையையும் அவர்கள் இருக்க வேண்டிய இருப்பையும் மனத்தில் நினைந்த

1 , . Love unexpressed is sacred.