பக்கம்:தம்பியர் இருவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 5

முதலியன அணிந்து அரசக் கோலத்தோடு விளங்க

வேண்டியவனாகிய இராமன், இத்தவக்கோலத்துடன் விளங்குவது குகனுடைய கண்களில் நீரைப் பெருக்குகிறது. இக்கொடுங்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தன்

மேலேயே குகன் கோபம் கொள்கிறான். எனவே,

இராமனை நோக்கி, இவ்வுலக முழுதுக்கும் உரிமை

உடையவனே, உன்னை இக்கோலத்திற்கண்ட யான் என்

கண்களைப் பிடுங்கி எறிந்துவிடாமல் இருப்பதால் என்

நட்பையே பொய்யானது என்று கருதுகிறேன். இனி" இதற்குக் கழுவாயாக நின்னிடமே தங்கி ஏவல் செய்கு, வன், என்கிறான்.

'கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்துவான். இப். பார்குலாம் செல்வ! கின்னை இங்ங்னம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கைநோக்கித். தீர்கிலேன் ஆனது ஐய! செய்குவன் அடிமை", என்றான்.

(கம்பன்-1969)

சாவிற்சாதல், நோவில் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், பிரிவு நனிவருந்தல் முதலாயினவற்றை நண்பர்கட்கு இலக்கணமாகக் கூறுவர் நல்லோர். எனவே, நல்ல நண்பனாகிய குகன், தன் தலைவனாகிய இராமன் இங்ங்ணம் அவதியுறும் நிலையில் தான் மட்டும் தன்னுாரில் சென்று மகிழ்ந்திருப்பதை விரும்பவில்லை. தான் உண்மை யான நண்பனாய் இருந்தால், இராமனுடைய துன்பத் தைக் கண்டு இருந்தால், இராமனுடைய துன்பத்தைக் கண்டு அதனைப் போக்க முற்பட்டிருக்க வேண்டும் என்று குகன் கருதுகிறான். அவ்வாறு அவனுடைய துன்பத்தைப் போக்க முடியவில்லையாயின், தான் அத்துன்பத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் கூடாது. இந்நிலையில் செய்யத் தகுவது யாது? பார்ப்பதற்குக் காரணமாய் இருந்த கண்ணை ஏன் பிடுங்கி விடக் கூடாது?’ என்று கருதுகிறான் குகன். இக்கூற்றிலிருந்து அவனுடைய அன்பின் ஆழமும் அகலமும் வெளிப்படுகின்றன.