பக்கம்:தம்பியர் இருவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தம்பியர் இருவர்

"அப்பம், அன்னம், பாயசம் முதலியவற்றைக் குகன் கொணர்ந்தான்' என்று கூறி இருப்பவும், கம்பநாடன் முதனு:ல் கருத்துக்கு முரணாக இங்கனம் பாடியதற்குக் காரணம், அவன் தமிழ்ப் பண்பாட்டை நன்கு அறிந் திருந்ததே ஆகும். காட்டில் வாழும் வேடனாகிய குகன் பணியாரமும் பாயசமும் கொண்டு வந்தான் என்பதைக் காட்டிலும், மீனும் தேனும் கொண்டு வந்தான் என்பது சாலவும் பொருத்தமுடையதே. இனிக் குகனும் இராமனும் பழகும் விதத்தைக் காண்போம்:

குகன் கொணர்ந்த உணவை இராமன் உண்ணா விட்டாலும், அதனைத் தான் முழுமனத்துடன் ஏற்றுக் கொண்டதாகவே கூறிவிட்டான். அவன் கூறிய முறையா லும் காட்டிய பரிவாலும் குகனும் இராமன் அவ்வுணவை உண்ணவில்லை என்பதை மறந்து, இராமனிடம் தங்கி நின்றான். எனவே, இராமன் அவனை நோக்கி, 'ஐய, நாளை நாங்கள் இக்கங்கை யாற்றைக் கடந்து செல்ல இருக்கிறோம் ஆதலின், இன்று, உன் சுற்றத்தாரோடும் உன்னுடைய ஊருக்குச் சென்று, நாளைக் காலை இவண் நாவாயுடன் வந்து சேர்க', என்று கூறினான். தான் எவ்விதமான வசதியும் இல்லாத இடத்தில் தங்கியிருத்த லின் இராமன் இவ்வாறு கூறினான். தன்னைக் காண வந்தவன் அவனாக விடை பெற்றுக்கொண்டு போகக் கூச்சப்பட்டாலும் படலாம் என்று நினைத்துப் போலும் இராமன் தானே அவனுக்கு விடை தருகிற முறையிலும் அவனுடைய நட்பையும் உதவியையும் வேண்டி நிற்கும் முறையிலும் இவ்வாறு பேசி முடித்தான்! - இராமனுடைய இச்சொற்கள் இதுவரை அடைபட்டு நின்ற குகனுடைய உணர்ச்சி வெள்ளத்தை மடை உடைத்துவிட்டன. இராமன் எதிரே நின்றுகொண்டிருக் கும் குகனுடைய மணக்கண் முன்னர் இராமன் இருக்க வேண்டிய நிலைமையும், இப்போது இருக்கின்ற நிலைமை பும் மாறி மாறித் தோன்றுகின்றன. பீதாம்பரம் முடி