பக்கம்:தம்பியர் இருவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 3

பல சமயங்களில் கடுமையான செயலைச் செய்தவர் அதன் பயனாக இன்பத்தைப் பெறுவதும், இனிய செயலைச் செய்தவர் அதன் பயனாகத் துன்பத்தைப் பெறுதலும் காண்கிறோம். சிவபெருமான்மேல் மன்மதன் கரும்பு வில்லை வளைத்து மலர் வாளிகளைச் சொரிந்தான். மலர்களை ஒருவன்மேல் எறிதலைக் காட்டிலும் சிறந்த செயல் ஒன்றும் இருத்தற்கில்லை. எனினும், அதன் பயனாக மன்மதன் எரித்துச் சாம்பலாக்கப்பட்டான். ஆனால், அச்சிவபெருமான்மீதே சாக்கிய நாயனார் கற்களை எறிந்தார். அதன் பயனாக அவர் வீடு பேற்றையே பெற்றுவிட்டார். ஒருவன் மழுவினால் தன் தந்தையின் காலை வெட்டுதல் சிறந்த செயல் என்று யாரும் கூறமாட்டார். எனினும், சந்தருப்பம் மனநிலை என்பவற்றை நோக்க, இவை இரண்டும் சிறந்த செயல் களாகவே கருதப்பட்டதும் உண்டு. சேய்ஞலூரிற் பிறந்த சண்டே சுர நாயனார் தம் தந்தையார் காலைத் தடிந்தார்; அதனால் வீட்டின்பத்தையே பெற்றார். நல்ல அனுபவம் மிக்க தமிழ்த் தாத்தாவாகிய திருநாவுக்கரசப் பெருந்தகை யார் இதனை நன்கு உணர்ந்துதான், கரும்பு பிடித்தவர் (மன்மதன்) காயப்பட்டார்: ஆங்கு ஓர் கோடரியால் இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் (திருமுறை: 4: 102: 5) என்று கூறுகிறார். விதி மார்க்கத்தில் வாழ்ந்த வ ராகிய சிவகோசரியார் மிகக் கொடியது என்றும். அருநரகில் கொண்டு செலுத்தும் என்றும் கருதி வெறுத்து ஒதுக்கிய புலாலையே இறைவனுக்குப் படைத்து அச்சிவகோசரி யாருக்கு முன்பே வீடு பேற்றை அடைந்த கண்ணப்பர் செயலைப்பற்றிக் கவலை கொள்ளாமல், இறைவன் அவருடைய மனநிலை ஒன்றையே கண்டான் என்பதும் இந்நாட்டார் அறிந்த தொன்றாகும்.

இத்தகைய அடிப்படையை அறிந்தமையாலே தான் கம்பநாடன் குகன் மீனை இராமபிரானுக்குக் காணிக்கை யாகக் கொணர்ந்தான் என்று பாடினான். வான்மீகியார்,