பக்கம்:தம்பியர் இருவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 தம்பியர் இருவர்

அவனுக்காகவே அவ்னிடம் அன்பு பாராட்டுபவர் மிகவும் குன்றவு. சக்கரவர்த்தியின் முதல் மகன் என்பதற்காக அல்லாமல் அவனுக்காகவே அவனிடம் அன்பு பாராட்டு பவர் குறைந்துள்ள இந்த உலகில் இத்தகைய கள்ளங்கபட மற்றதும் துய்மையானதுமான அன்பு இராமனை முற்றிலும் கவர்ந்துவிட்டதில் யாதும் வியப்பில்லை. இவ்வாறு அவன் கவரப்பட்டான் என்பதை அடுத்த பாடல் நன்கு விளக்குகிறது. குகன் கொணர்ந்த உணவை இராமன் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. தவ வேடம் பூண்டு புலால் உண்ணாத கம்ப ராமன் இப்பொழுது காய் கனிகளை மட்டுமே உண்பதாக உறுதி பூண்டு புறப்பட் டுள்ளான். அவன் குகன் கொணர்ந்த உணவை உண்பது இயலாது. எனினும், அவ்வுணவுடன் கலந்துள்ள தூய்மை யான அன்பை நோக்க அதனைம் புறக்கணிக்கவும் இயலாது. எனவே, குகனை நோக்கிக் கூறுகிறான். ‘ஐயனே, உன் மனத்தில் உள்ள அன்பு முற்றிப் பத்தியாக மாறிவிட்டதை அறிவிப்பதுபோல நீ கொணர்ந்த உணவை மிகவும் கிடைத்தற்கரிய அமிழ்தமாகவே ஏற்றுக்கொள்ளு கிறோம். பரிவுடன் (Sympathy) கலந்திருத்தலின் அவ்வுண வைத் தூய்மையானது என்றே எம்போல்வார் ஏற்றுக் கொள்வர். நாம் அதனை உண்டதாகவே கருதுகிறோம்!”

அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த

- - - காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த

- - அன்றே? பரிவினில் தpஇய என்னில் பவித்திரம் எம்மனோர்க்கும் உரியன இனிதின் காமும் உண்டனம் அன்றே?"

என்றான்." (கம்பன்-1967) செய்கின்ற செயலைப் பெரிதென மதியாமல் அச் செயலின் அடிப்படையில் உள்ள மனநிலையைமட்டும் பெரிதாக்ப் போற்றும் பெருமை இத்தமிழ்நாட்டில் உண்டு.