பக்கம்:தம்பியர் இருவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 11

கூடாதபடி மிகுந்த அன்பைக் காட்டுபவனாய் பேசத் தொடங்குகிறான். ஐயனே, உணவுக்கு ஏற்ற முறையில் மீனும் தேனும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். உண்டருள்க!' என்று கூறியிருப்பின், இராமன்பாடு தர்ம சங்கடமாகிவிடும். ஆனால், பண்பாடுடைய குகன் வாயில் அத்தகைய சொற்கள் வாரா அல்லவா? உண்டருள்க!' என்பது சொல்லளவில் மரியாதையைக் காட்டினாலும் ஒரு வகையில் ஏவலாகவே அமைந்துவிடும். எனவே, அவ்வாறு கூறாமல், என்கொல் திருவுளம்? என்கிறான் குகன்.

"இருத்திஈண்டு' என்ன லோடும் இருக்திலன்; எல்லை கீத்த அருத்தியன் 'தேனும் மீனும்

அமுதினுக்கு அமைவ தாகத் திருத்தினன் கொணர்ந்தேன்; என்கொல்

திருவுளம்?' என்ன, வீரன் விருத்தமா தவரை கோக்கி

முறுவலன் விளம்பல் உற்றான். -

(கம்பன்-1966)

குகனுடைய பேச்சில் அவனுடைய அன்பின் ஆழமும், வஞ்சகமற்ற மனப்பாங்கும் நன்கு வெளிப்படுகின்றன. "என்கொல் திருவுளம்?' என்ற அடக்கமான வினாவில் அவனுடைய நயத்தகு நாகரிகமும் வியத்தகு பண்பாடும் வெளிப்படுகின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அமைவது போல, குகனுடைய மனப்பாங்கை விளக்கச் சிலவாகிய இச்சொற்களே போதுமானவையாய் அமைந்துவிட்டன. இப்பண்பாட்டைக் கண்ட இராமன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டுவிட்டான். அயோத்தியில் அவன் இத்தகைய ஆடம்பரமற்ற அன்பைச் சிலரிடம் மட்டுமே கண்டதுண்டு. அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்துவிட்ட காரணத்தால் அவனிடம் தூய்மையான அன்பு பாராட்டுபவர்களுங்கூட ஆடம்பரத்துடனேயே இதனைத் தெரிவித்தனர். அவன் எங்குச் சென்றாலும்