பக்கம்:தம்பியர் இருவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0. தம்பியர் இருவர்

இலக்குவன். தன்னிடம் தோற்றவனாயினும் புருடோத் தமனை’ அரசமரியாதைகளுடன் நடத்திய அலெக்ஸாண் டரும் இவ்வுண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டு அன்றோ? இன்று இங்கிலாந்தின் அரசியாராய் அமர்ந்துள்ளவவரும் தம்முடைய உலக யாத்திரையின்போது இவ்வாறு நடந்து கொண்டதைச் செய்தித்தாள்கள் மூலம் அறிந்தோம். அல்லவா?

இலக்குவன் கூறிய குறிப்பை அருகில் இருந்தவர்கள் அறிந்து கொண்டிருத்தல் இயலாது. எனினும், இராமன் அதனை உடன் உணர்ந்து கொண்டான் என்பதை இராமன் செய்த செயலால் அறியலாம். உடனே குகனை அழைத்து வருமாறு இலக்குவனை நோக்கி இராமன் கூறவும், அவன் சென்று அழைத்து வந்து விட்டான். உள்ளே வந்த குகன், கண்ணனைக் கண்ணில் நோக்கிக் களித்தனன் உடனே கீழே வீழ்ந்து மண்ணுற வணங்கி எழுந்து உடலை வளைத்து வாய் புதைத்து நின்று விட்டான். அவ்வாறு குகன் தானும் ஒர் அரசன் என்பதை .யும் கருதாமல் கீழே விழுந்து வணங்கிவிட்டு அருகில் வாய் புதைத்து நின்றாலும், அவன் ஒர் அரசன் என்பதை இராமன் மட்டும் மறந்துவிடவில்லை. எனவே, இலக்குவன் கூறிய குறிப்பையும் மனத்துட்கொண்டு அக்கமலக் கண்ணன் வாய் திறந்து முதலிற்பேசிய சொற்கள் இருத்தி ஈண்டு என்பனவாகும். இராமன் அமர்க' என்று கூறி னாலும் குகன் உட்கார விரும்பவில்லை. ஒரு சிலரைக் கண்டவுடன் நம் மனம் அவர்களிடம் நம்மையும் அறியாமல் மரியாதை செலுத்தத் தொடங்கி விடுகிறது. அவர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர்கள் எதிரே அமர மனம் இடம் தருவதில்லை. குகனும் இந்த மனநிலையில் இருப்ப தால், அவன் இராமன் எதிரே அமர விரும்பவில்லை.

இனி அடுத்துக் குகன் பேசத் தொடங்குகிறான். இராமன் 'இருத்தி என்று கட்டளையிட்டும் தான் அமரவில்லை. என்றால், அதை இராமன் தவறாக எடுத்துக் கொள்ளக்