பக்கம்:தம்பியர் இருவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 9

பொழுது, குகன் பல படகுகளை வைத்து ஆளும் அரசச் செல்வம் படைத்தவன் என்பதையும் இலக்குவன் குறித் தமை காண்க .

இவ்வாறு இலக்குவன் கூறவேண்டிய இன்றியமை யாமை யாது? இராமன் காட்டில் வந்து தங்கியிருப்பினும் அவன் சக்கரவர்த்தித் திருமகன் என்பதும், இன்று இல்லா விடினும் ஒரு நாள் சக்கரவர்த்தி ஆக வேண்டியவன் என்பதும் மறக்கற்பாலன அல்ல. எனவே, அவன் ஒருவரை இன்னார் என்று அறியாமல் வரவேற்றல் இயலாது; ஒரு வரைப் பார்த்த பின்னரும் அவரது புறத்தோற்றத்தைக் கொண்டு மரியாதை முதலியன செய்தல் இயலாது. ஆனால், அரசனாய் உள்ளவன் வருபவர் தரம் அறிந்து சிலரை அமரச் செய்ய வேண்டும். சிலரை நின்றபடியே பேசி அனுப்ப வேண்டும். எனவே, வருபவனை இராமன் எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதைக் குறிப் பால் உணர்த்துகிறான் இளையவன். குகன் வேடனா யினும், அவனது புறத்தோற்றம் நன்கு அமையாவிடினும், அவன் ஒர் அரசன் என்பதும், யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்லன் என்பதும் கருத்தில் இருத்த வேண்டுபவை. இராமனை வந்து பார்க்க வேண்டிய கடப்பாடு உடை யவன் அல்லன் குகன். பின்னர் ஏன் இவ்வளவு சுற்றத் தாரோடும் வந்துள்ளான் எனில், அவனுடைய அன்பு ஒன்றே காரணம் என்க. எனவே, உரிமையுடைய ஒர் அரசன், தன் நாட்டிற்குள் வந்து தங்கிய பக்கத்து நாட்டின் மன்னனைக் காணும் நிலையில் குகன் இப் பொழுது வந்துள்ளான். ஆகலின், அவனை வரிசை அறிந்து வரவேற்றல் இராமனுடைய கடமைகளுள் தலையாய ஒன்றாகும். எனவே, இலக்குவன் இதனைப் பலர் நடுவில், இராமனுக்கு நினைவூட்டல் ஆகாது என்ற கருத்தால் குறிப்பாக உணர்த்துகிறான். வந்திருப்பவனும் சுதந்தரமுடைய ஒர் அரசன் என்ற சொற்களை இறுதியில் கூறுவதால் இக்கருத்தைப் பெறவைத்து விட்டான்