பக்கம்:தம்பியர் இருவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 21

வானா? உறுதியாக விடப்போவதில்லை. குகன் அன்றிக் கடவுளே வந்து இலக்குவனை உறங்குமாறு வேண்டினா லும் அவன் உறங்கப்போவதில்லை. ஆனால், மற்றொன்று செய்து பார்க்கலாம் அன்றோ? தன்னைப் போன்ற வீரன் ஒருவனும் அவனுடைய வீரர் பலரும் காவல் புரிகின்றனர் என்று அறிந்தால், ஒரு வேளை இலக்குவன் சற்றுக் கண் அயரலாம் அன்றோ? இலக்குவனை நேரடியாகப் பார்த்து, உறங்கச் செல். நானே காவல் புரிகின்றேன்’ என்று கூறக் குகனுக்கு மனத்திடம் வரவில்லை. -

ஒரு வேளை இலக்குவன் காவல் புரிவதில் முழு விருப்பம் காட்டாமல் கடமை என்பதற்காக மேற் கொண் டிருப்பின், குகனுக்கு இத்தகைய மனப்பான்மை தோன்றி யிருக்கலாம். அப்பொழுது இலக்குவனை உறங்கப் போகு மாறு கூடக் கூறியிருப்பான். ஆனால், இலக்குவனுடைய அன்பின் ஆழத்தையும் அவன் தன் தமையனுடைய இப்போதைய நிலைக்கு வருந்துவதையும் கண்ட குகனுக்கு எவ்வாறு இலக்குவனைப் போ' என்று கூற மனம் வரும்? எனவே, அவன் வாயாற்கூறாமலே தானும் அத்தொழிலை மேற்கொண்டுள்ளான். இவ்வாறு அவன் செய்தசெயலுக்குக் காரணம் கூறாமல், பழையவர்கள் கூறுமுறையில் கூறினால் அதனால் குகனுடைய பெருமை வெளிப்படாமை கண்கூடு. இராமனுடைய கடவுட்டன்மையில் ஈடுபட்ட அவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இவ்வாறு கூறுவதில் குகனுடைய பெருமை குறைவது கண்கூடு. குகன் பேசிய இரண்டே சொற்களால் அவனுடைய மனப்பண்பை அறிந்துகொண்டு இலக்குவன், தாயினும் நல்லவன்' என்று அப்பொழுதுதான் கூறியுள்ளான். அதற்குள்ளாக, அந்த இலக்குவன்மேல் சந்தேகம் கொண்டான் குகன், அவன் பங்காளி என்பதற்காக, என்று கூறுவதன் பொருத்த மின்மை நன்கு விளங்கும்.

பொழுது விடிந்தது. உறக்கம் நீங்கி எழுந்த இராம பிரான் குகனை நோக்கி உடனே நாவாய் கொணருமாறு