பக்கம்:தம்பியர் இருவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泌2 தம்பியர் இருவர்

ஏவினான். இந்த நிலையில் குகனுடைய மனம் மாறி விடுகிறது. இராமனையும் சீதையையும் ஒரு முறை நோக்கிய அப்பெருமகன், அவ்விருவரும் காட்டில் சென்று வாழ்வதை மனத்தாலும் கருத முடியாமல் வருந்துகிறான். தேவியின் மெல்லிய பாதங்கள் பரற்கற்களில் பட்டுத் துடிப்பதை அவன் மனக்கண்ணால் காண்கிறான். ஆனால், உடன் அழைத்து வருவதால் யாதும் தீங்கில்லை என நினைத்தே இராமன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்க, இடை வழியில் அதன் அருமையைக் கூறிக் காடு செல்ல வேண்டா என்று தடுப்பது மரியாதைக்குரிய செயல் அன்று. எனவே, குகன் வேறு வழியைக் கையாள்கிறான்.

இராமன் வனம் செல்லவேண்டுமென்பதுதானே குறிக் கோள்? தன் ஊராகிய சிருங்கிபேரமும் காட்டிலேதானே அமைந்திருக்கிறது? எனவே, தன் ஊரில் இராமன் தங்கி விடுவதும் காட்டில் தங்கியது போலத்தானே ஆகும்? இவ்வாறு சிந்திக்கிறது குகனுடைய அன்பு மனம். வனத்தில் வாழ்பவர் ஏவலரை வைத்துக்கொள்ளக் கூடாதா? இராமனை நோக்கி இவை அனைத்தையும் கூறுகிறான். குகன். தேனும் தினையுமே இராமன் உண்ண வேண்டும் எனில், அவை இங்கேயே கிடைக்கும். பொழுதைக் கழிப்பதற்கு ஆயிரக்கணக்கான வேடர் துணை உளர். 'காட்டில் வாழ்கிறோம்,' என்ற நினைவுண்டாகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத் தையும் செய்ய அவன் காத்து நிற்கிறான், ஒலிக்கின்ற ஆகாயத்தில் உள்ள பொருள் வேண்டுமென்று விரும்பினா லும் கொண்டுவரக்கூடிய வீரர் பலர் காத்து நிற்கின்றனர். இன்னோரன்ன பல காரணங் கூறியும், இராமனைத் தன் பால் நின்றுவிட வேண்டுகிறான் குகன். -

இவை அனைத்தையும் கேட்ட இராமன் புன்முறுவ லுடன் மீண்டுவரும் போது குகனிடம் வருவதாகக் கூறவே,