பக்கம்:தம்பியர் இருவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச, ஞானசம்பந்தன் 2岛

குகனுக்கு மேலும் பேச வாய்ப்பு இல்லையாகிவிட்டது. இராமனை விட்டுப் பிரிய மனமில்லாத குகன் அவனை ஏற்றிக்கொண்ட நாவாயைத் தானே செலுத்திச் செல்கிறான். - ,

ஒடத்தை விட்டு மறுகரையிலிறங்கிய இராமன், 'சித்திரகூட மலைக்குச் செல்லும் வழி யாது?’ என்று குகனை வினவினான். இக்கேள்வி குகனைத் திகைக்க வைத்துவிட்டது.

'பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் (குகன்) அடிதாழா,

"உத்தம! அடிநாயேன் ஓதுவது உளது, என்றான்.

(கம்பன்-1989)

இத்துணை முன்னேற்பாட்டுடன் குகன் கூறத் தொடங்கிய செய்தி இராமனை வியப்பில் ஆழ்த்திவிட்டது. ‘ஐயனே, உன்னுடன் வரும் பேற்றை எனக்கு நல்குவையாயின், இப் பக்கத்து வழிகளை நன்கறிந்த யான், செல்லுதற்கு அரிய வான வழிகளையும் நன்கு செல்லக்கூடியனவாக்கிவிடும் வன்மை உடையேன்; உங்கள் பசி நேரத்திற்கு வேண்டும் கனி கிழங்குகளைத் தேடித் தருவேன்; நீங்கள் தங்குவதற் குரிய பர்ணசாலை முதலின அமைப்பேன்; ஒரு விநாடியும் உங்களைப் பிரிந்திரேன்,” என்னும் கருத்தில்,

நெற்றியிடு நெறிவல்லேன், நேடினென் வழுவாமல்

நறியன கனிகாயும் நறவுஇவை தரவல்லேன்; உறைவிடம் அமைவிப்பேன்; ஒருநொடி வரைஉம்மைப் பிறிகிலென் உடன்ஏகப் பெறுகுவன் எனின்நாயேன்.”

(கம்பன்-1990)

என்று கூறுகிறான்.

இவ்வாறு கூறியதுடன் குகன் அமையவில்லை;

தன்னை உடன் அழைத்துச் செல்வதால் ஏற்படும் நலன்கள்

அனைத்தையும் வரிசைப்படுத்திக் கூறுகிறான். தீயவற்றை