பக்கம்:தம்பியர் இருவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 3

நடந்து வருகிறான்: வழியில் கங்கை தடுத்துவிட்டது அவனது முன்னேற்றத்தை. படைஞரும் பரதனும் கங்கை யின் வடகரையில் தங்கிவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கரையிலிருந்த குகனைச் சிறிது காண வேண்டும். முன்னர் இராமனுடன் காணப்பட்ட குகன் அல்லன் இவன். சிருங்கிபேரத்தின் அரசனும், தன் உயிர்த் துணைவனாய இராமனைக் காக்கும் பொறுப்பை வலிய மேற் கொண்ட வனும் ஆகிய குகனை இப்பொழுது காண்கிறோம். கை கட்டி வாய் பொத்திக் கண்ணிர் ஆறாய்ப் பெருக நிற்கும். குகன் அல்லன், இப்பொழுது கங்கைக் கரையில் நிற்பவன். இப்பொழுது அவன் நிற்கும் நிலை முன்னரே அவன் அன்புள்ளத்தை அறிந்த நமக்குக்கூட அச்சத்தை உண்டாக்குகிறது.

“நகைமிகக் கண்கள்த காற நாசியில்

புகைஉறக் குனிப்புறும் புருவப் போர்விலான்

“மையுற உயிரெலாம் இறுதி வாங்குவான் கையுறு கவர்அயில் காலன் என்னும்பேர் ஐயுறு மாறுதான் உருவம் ஆயினான் மெய்யுறு தானையான் வில்லின் கல்வியான்.

கட்டிய சுரிகையன், கடித்த வாயினன்

வெட்டிய மொழியினன் விழிக்கண் தீயினன்; கொட்டிய துடியினன்; குறிக்கும் கொம்பினன்;

கிட்டியது அமர்!’ எனக் கிளரும் தோளினான்.”

(கம்பன்-23:09, 10, 11)

குகன் நமக்குப் புதியவனல்லன்; ஆனால், இத்துணைக் கோபம் அவனுக்கும் வர முடியுமா என்றுதான் வியப்புத் தோன்றுகிறது. இத்துணைச் சினத்திற்கும் காரணம் கூறுவது போன்று கவிஞன் கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான்’ என்று கூறுகிறான். அப்பொழுதும் ஒர்