பக்கம்:தம்பியர் இருவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றின் ஆற்றலான்

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்,” என்பது பெரியோர் அனுபவ வாயிலாகக் கண்ட உண்மை. பண்பாட்டினால் மேம்பட்ட ஒருவனை அதே பண்பாடு நிறைந்துள்ள மற்றொருவன் அறிந்து கொள்வது எளிதாகும். ஏனையோர் அறிவதன் முன் தன் இனத்தவனை ஒருவன் காண்டல் கூடும். பல சந்தர்ப்பங்களில் மிக நெருங்கிப் பழகியும் உறவு கொண்டாடியுங்கூட அறிய முடியாத பண்புகளை ஒரு வினாடியில் ஒருவர் அறிந்து விடுகிறார். சூழ்நிலை எவ்வளவு மாறுபட்டதாய் இருப்பினும், கவலை இல்லை; பண்புடையாளர் மற்றொரு பண்புடையாரை எளிதில் அறிவர். இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குறகிறவர்களே பரதனும் குகனும். எண்ணுதற்கு எட்டாத நற்புண்புகளை உடைய பரதன், அயோத்தி மீண்டதும், இராமனுக்கு நிகழ்ந்த வற்றை அறிந்து பெரிதும் வருந்தினான். உடனே, வள்ள லைக் கொணர்வான் வேண்டி அனைவரும் காடு நோக்கிப் புறப்படுக!' என்று ஆணையிட்டுத் தானும் புறப்புட்டு வருகிறான்.

'துரண்டிய தேர்களும், துரக வெள்ளமும்,

காண்டகு கரிகளும் தொடரக் காலினே'

(கம்பன்-2302)