பக்கம்:தம்பியர் இருவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 29

ராய் இருக்கிறான். அறிவின் துணை கொண்டு ஆய்ந்து இன்னாருக்கு இத்தகைய உதவி தேவை என்று கருதாமல் உதவுவதே வள்ளன்மை எனப்படும். பாரி வள்ளல் முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த செயல் இத்தகைய அன்பால் தூண்டப்பட்டது அன்றோ! அதே போலக் குகனுடைய அன்பும், அறிவு, ஆராய்ச்சி என்பவற்றால் காண இயலாத உயர்ந்த நிலையில் உள்ளதொன்றாகும். இராமகாதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தினுங்

குகனுடைய அன்பு ஒப்புயர்வு அற்றதாய் விளங்கக் காண் கிறோம்.

  • கவிஞர் குகனை வள்ளல் என்று குறிப்பார் 10, 250.