பக்கம்:தம்பியர் இருவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தம்பியர் இருவர்

"அங்குள கிளைகாவற்கு அமைதியின் உளன்உம்பி இங்குள கிளைகாவற்கு யாருளர்? இசையாய்;ே உன்கிளை எனது.அன்றோ? உறுதுயர் உறலாமோ? என்கிளை இதுகா என் ஏவலின் இனிது’ என்றான்.

(கம்பன்- 997)

இத்தகைய அன்புக் கட்டளை தவிர வேறு எந்த வழி யில் இராமன் பேசியிருப்பினும், ஒன்று குகனை நிறுத்தி யிருக்க முடியாது; அன்றேல், அவன் மனம் நோகுமாறு செய்திருக்க வேண்டும். இராமன் தனக்கே உரிய தனி முறையில் தன் கருத்தையும் நிறைவேற்றிக் குகனையும் அமைதி பெறச் செய்தான். அன்புக் கட்டளையை மீற முடியாத குகன், பிரியா விடை தந்து நின்றுவிட்டான்.

இராமன் குகனும் பழகிய முறையை இதுகாறுங் கண்டோம். தூய்மையானதும் பயன் கருதாததும் ஆழ மானதும் ஆன அன்பிற்கு இதுவே இலக்கியம். இராமனுடைய உயர்ந்த பண்பாட்டை ஒரளவு குகன் அறிந்திருந்தானே தவிர, அப்பெருமகன் திருமகள் கேள்வன் என்பதைச் சற்றும் அறியவில்லை. இராமனைத் தன்னைப் போன்ற மனிதனாகவே மதித்து எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் அவனிடம் அன்பு பாராட்டி யதே குகனிடம் நாம் காணும் சிறப்பு. இன்னுங் கூறப் போனால், அம்மூவரையும் மிகவும் இளையவர்களாகவே அவன் மதித்து விட்டமையின், ஒரு தாய், பிடிவாதம் செய் கின்ற குழந்தையிடத்துக்காட்டும் பரிவையே குகனும் அவர் களிடத்துக் காட்டுகிறான். அன்பை வெளிக் காட்டுவதில் எவ்வித நாணமும் அடையவில்லை குகன்; . . . . அன்பு இலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு." -

- • ? (திரு. 72) ஆகலின், உடல், பொருள், ஆவி அனைத்தையும் தன்னால் அன்பு செய்யப்பட்ட இராமனிடம் ஒப்படைக்கத் தயா