பக்கம்:தம்பியர் இருவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 27

குகனுடைய அன்பிற்கு முற்றிலும் ஏற்ற பாராட்டு இது என்று நம்மையும் அறியாமல் நம் மனம் மகிழ்கிறது! இங்குள்ளவரை மட்டும் தொடர்பு படுத்தியதுடன் நில்லாமல் ஊரில் வாழ்பவரையும் இவ்வுறவு முறைக்கு ஆளாக்குகிறான் இராமன்.

"துன்புளது எனின் அன்றோ சுகம் உளது? அதுவன்றிப் பின்புளது இடைமன்னும் பிரிவுளது என உன்னேல்: முன்புளம் ஒருங்ால்வேம், முடிவுளது எனஉன்னா அன்புள; இனிகாம் ஓர் ஐவர்கள் உளரானேம்.”

(கம்பன்-1995)

இவ்வளவு கூறினாலும் குகனுடைய ஐயத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லையன்றோ? இராமன் மனைவியுடன் காட்டில் தனியே தங்குதல் தகாது என்ற குகனுடைய ஐயம் நீக்கப்படல் வேண்டும் அன்றோ? அதற்கெனவே அடுத்த பாடலில் இராமன், “நீ அஞ்ச வேண்டா, உன் தம்பியாகிய இலக்குவன் என்னுடன் இருக்கிறான்,” என்ற கருத்தில் 'படர் உற உளன் உம்பி கானுறை பகல் எல்லாம்’ (1996) என்று கூறுவது போற்றற்குரியது.

இவ்வளவு கூறியும் அக்குகனது மனம் அமைதி அடைந்ததாகத் தெரியவில்லை. எனவே, இராமன் அன்பே வடிவான குகனுக்கு அன்பால் கட்டளையிடு கிறான். அயோத்தியில் தங்க விரும்பா விடினும் உன் தம்பி பரதன் என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவண் தங்கிவிட்டான். ஆளும் குலத்தில் பிறந்த நாம், எவ்வளவு அதனை விரும்பாவிடினும், கடமையைச் செய்ய வேண்டும் அல்லவா? எனவே, நீ புறப்பட்டுவிட்டால் இங்குள்ள நம் கிளைஞரைக் காப்பாற்றுவார் யார்? உன் சுற்றத்தார் என்னுடையவர் அல்லரோ?’ என்ற கருத்தில் அன்பால் கட்டளை இடுகிறான்: