பக்கம்:தம்பியர் இருவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 26 தம்பியர் இருவர்

நன்கு வாழ முடியாது, என்று குகன் கருதுவதில் தவறு யாது? அன்பு செய்யப்பட்டவர்களுடைய வன்மைய்ை அன்புடையர்அ. றிய முடியாது. என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே போலும் ஒவ்வொரு பாட்டின்

இறுதியிலும் மலரடி பிரியேன்” என்று குகன் கூறுகிறான்!

இராமனுடைய வன்மையைக் குகன் குறைத்து மறைத்துவிட்டாலும், அதன் பின்னர் இருக்கின்ற அன்பை இராமன் நன்கு அறிந்து கொண்டான். எனவே, குகன் மனம் அமைதியடையும்படி விடையிறுக்க வேண்டுவது அவனுடைய பொறுப்பாகி விட்டது. மேலும், குகனுடைய அன்புக்கும் கைம்மாறு செய்யும் வகையில் இராமனுடைய விடை அமைந்து கிடக்கிறது. தன்னுடைய இரகு குலத்தின் பெருமையை அப்படியே மறந்து விட்டான் இராமன். குகன் வேடுவர் குலத்தில் தோன்றிய நாவாய் வேட்டுவன் என்பதையும் இராமனை மறக்கச் செய்துவிட்டது 'குகனுடைய துய அன்பு. வேறுபாடுகள் அனைத்தையும் மீறித் தோன்றுகிற இந்த அன்பு வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்ட இராமன், குகனுடைய அன்புக்கு நன்றி பாராட்ட வேண்டியவனாகிறான். இரகு குலத்தில் தசரதன் பிள்ளையாய்த் தோன்றிய தன்னைக் குகனுடைய தமயனாக்கி, இளவல் இலக்குவனைக் குகனுடைய தம்பி யாக்கிவிடுகிறான். இவ்வளவிலும் இராமனுடைய அன்பு நின்றபாடில்லை. ஜனகன் மகளும், தசரதன் மருமகளும் தன் மனைவியும் ஆகிய சீதையை வேட்டுவக் குகனுடைய தோழியாக்கி விடுகிறான். மேலும், இவ்வுலகம் குகனுக்கே சொந்தமென்றும், அவனுடைய ஏவற்படியே தான் ஆள்வ. தாகவும் கூறிவிடுகிறான். .

'அன்னவன் உரைகேளா அமலனும் உரை செய்வான்:

என்னுயிர் அனையாய்நீ; இளவலுன் இளையான் இக் T நன்னுத லவள்கின்கேன், களிர்கடல் உலகெல்லாம் உன்னுடையது;கானுன் தொழில்உரிமையினுள்ளேன்.”

• . . (கம்பன்-1994)