பக்கம்:தம்பியர் இருவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 25

யான வாழ்க்கையே வாழ்ந்து பழகியவளும் ஆகிய ஒரு பெண்ணை அழைத்து வரலாமா? அவ்வாறு வந்துவிட்ட அவர்கட்குக் காட்டு வழிகளில் அனுபவம் உடையான் ஒருவன் உதவி தேவைப்படாதா? அவர்கள் ஒப்புயர்வற்ற வீரர்களாய் இருக்கலாம். ஆனால், நீர் வேட்கையால் வாடும்போது அவர்கள் வீரம் எவ்வாறு பயன்படும்? நீர் எங்குக் கிடைக்கும் என்ற அனுபவம் தேவைப்படுமே தவிர, வில் வீரம் இங்குப் பயன்படாதன்றோ? -

‘எடுத்த காரியத்தை எவ்வாறாயினும் முடித்து விட வேண்டும் என்ற கருத்தால் முன்பின் ஆராயாமல் பெண் ஒருத்தியையும் உடனழைத்துக்கொண்டு வனம் புகுந்து விட்டனர் இச்சோதரர். என்று கூடக் குகன் நினைந்து விட்டான். * .

சித்திரகூடமலைக்கு வழி தெரியாமல் கேட்கின்ற இவர்கள் காட்டு வாழ்க்கையின் நுணுக்கங்களை எவ்வாறு அறிய முடியும்? பார்ப்பதற்கு ஒன்று போலக் காணப்படி னும் சில பகுதிகளில் தங்கலாம்; சிலவற்றில் நெருங்கக் கூடக் கூடாதே! இவற்றை இவர்கள் எங்ங்னம் அறிய முடியும்? குகன் இதைப் பற்றி நினைக்குந்தோறும், நினைக்குந்தோறும், இவர்களைத் தனியே விடுதல் தகாது. என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.

இராமனுடைய வன்மைைைய ஒரளவு அறிந்தும் நன்கு கேட்டும் தெரிந்திருந்தவனாகிய தசரதனே இராமன் காட்டில் நன்கு வாழ முடியாது என்று நினைத்து விட்டானே! ஏன்? அவனுடைய அன்பு என்ற கண்ணாடி. வழியாகக் காணும்போது இராமன் சிவனுடைய வில்லை ஒடித்தவனாகக் காட்சி நல்கவில்லை; பச்சைக் குழந்தை யாகக் கூனி கூன்மேல் வில் உருண்டை அடித்தவனாகவே காட்சி நல்குகிறான். கற்றறிவுடையவனாகிய தசரதனே அவ்வாறு இராமனைப் பற்றி அன்பு காரணமாக நினைப் பானாகில், குகன் அதே அன்பால் தூண்டப்பட்ட நிலையில் எவ்வாறு நினைப்பான்? இராமனால் இப்பரந்த காட்டில்