பக்கம்:தம்பியர் இருவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 3.3

யினர் சென்று விட்டனர். எஞ்சியவர் அனைவரும் குகனைச் சுற்றி நிற்கின்றனர். இவ்வளவும் கூற இத்தனை நேரம் ஆயிற்று எனினும், குகன் எவ்வளவு வேகமாக இவ்வளவு ஆணைகளையும் இட்டான் என்பதைக் கவிஞன் நன்கு கூறுகிறான். குகன் ஆணையிட்ட வேகத்தைப் பாடலில் காணப்படும் சொற்களால் கம்பன் கூறவில்லை. அவ்வாறு கூறியிருப்பின், அவன் சிறந்த கவிஞனும் ஆகான். பின்னர் எவ்வாறு கூறுகிறான்? கவிதைகளை அமைக்கும் ஒசை முறையால் இதனைக் கூறிவிட்டான். நான்கு சீர்களைக் கொண்ட விருத்தப் பாடல்களில் நூற்றுக்கும் மேலான ஒசை முறைகளை அமைத்த பெருமை கம்பநாடனையே சாரும். அவற்றுள் இங்குக் காட்டப் பெற்ற பாடல்கள் ஒரு

வகை. .”

'எலியெலாம் இப்படை, அரவம் யான்!” என ஒலியுலாம் சேனையை உவந்து கூயினான். என்ற இப்பாடலுடன் முன்னர்க் கூறிய மூன்று பாடல் களையும் வாய்விட்டு உரத்துப் படித்துப் பார்த்தால், உண்மை விளங்கும். அவற்றில் உள்ள சொல் தொடர்களும் அவ்வாறே. ஒவ்வொரு பாடலிலும் பயன்படுத்தப் பெற்றுள்ள வல்லெழுத்துகள் அவனுடைய சினம் வெளிப் படும் முறையை நமக்கு ஒசையால் அறிவிக்கின்றன. ஒரு பாடல் முழுவதிலும் ஒரு சொற்றொடர் பேசும் கம்ப நாடன் இப்பொழுது ஒரே பாடலில் மூன்று நான்கு வாக்கியங்களைப் பேசிவிடுகிறான். பொங்கி வரும் சினத்தால் சொற்றொடர் சிறியதாகவே அமையும். அதனையும் ஓசை மூலம் பெற வைக்கிறான் கவிஞன். இவை அனைத்தும் சேர்ந்து அவனுடைய ஆணைகள் மிக விரைவாகவும், மிக அழுத்தமாகவும் வெளி வந்தன என்பதைப் படிப்பார்க்கு உணர்த்தி நிற்கின்றன. -

இதனையடுத்துக் குகன் தனக்குத்தானே பேசிக் கொள்வது போலவும், உடன் நிற்பவர்கட்குக் கூறுவது

த.-3 - . . . :