பக்கம்:தம்பியர் இருவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - தம்பியர் இருவர்

போலவும் சில சொற்கள் பேசுகிறான். அச்சொற்களில் அவனுடைய நன்றியுணர்ச்சி, நட்பின் ஆழம் முதலியவை அனைத்தும் வெளியாகின்றன. எதிர்க்கரையில் நிற்கும் பரதனை அவன் இன்னும் காணவில்லை; எனவே, வந்தவன் பரதன் என்று அறிந்த மாத்திரத்தில் பேசத் தொடங்கிவிட்டான். -

'அஞ்சன வண்ணன்என் ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனை யால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே! செஞ்சரம் என்பன தீஉமிழ் கின்றன செல்லாவோ? உய்ஞ்சுஇவர் போயிடின் காய்க்குகன் என்றுஎனை

- ஒதாரோ?” (கம்பன்-2316)

இப்பாடலின் முதல் இரண்டு அடிகளையும் கவனித்தல் வேண்டும். வஞ்சண்ையால் அரசு எய்திய மன்னர் என்று குறிப்பிக்கப்படுகிறவன் பரதனாவான். இதனுடன் குகன் திறுத்தவில்லை. . .

"முன்னவன் என்றும் கினைந்திலன் மொய்புலி

அன்னான்.ஓர் பின்னவன் கின்றனன் என்றிலன்; அன்னவை பேசானேல் என்இவன் என்னை இகழ்ந்தது.இவ் வெல்லை

“. . . . . . . . . . . கடந்தன்றோ? மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம் வாயாவோ?’

- (கம்பன்-2318) இதனை அடுத்து வரும் பாடலில் குகனுடைய கற்பனையில் காட்சியளிக்கும் பரதன் இன்னும் ஒருபடி மேலே சென்று

பாவமும் கின்ற பெரும்பழி யும் பகை நண்போடும். ஏவமும் என்பவை மண்ணுலக ஆள்பவர் எண்ணாரோ? . (கம்பன்-2319) இம்மூன்று பாடல்களிலும் கூறியிiற்றை நன்கு கவனித்தல் வேண்டும். இப்பாடற்பகுதிகளில் ஒரு வகையான பரதன்