பக்கம்:தம்பியர் இருவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 35

காட்சியளிக்கிறான். பரதனைப் பற்றி இதற்கு முன்னர் அறிந்திருப்பவர்கட்குக் குகனுடைய இச்சொற்கள் வியப் பையும் ஓரளவு சினத்தையும் தருதல் கூடும். இதன் முற். பகுதியிலே தான் பரதனும் கோசலையும் பேசிக்கொண் டிருந்ததைக் கண்டோம். கோசலையால் நிறை. குணத் தவன் நின்னினும் நல்லனால் என்று புகழப்பட்டவன் பரதன். மேலும், கேகயத்திலிருந்து திரும்பிய பரதன் கைகேயி மூலந்தான் தந்தை உயிர் இழந்த செய்தியையும் தமையன் காடு சென்ற செய்தியையும் அறிந்தான்; தாயின் மேல் ஏற்பட்ட சினத்தையும் வெறுப்பையும் மாற்றிக் கொள்வதற்காகக் கோசலை கோயில் புகுந்தான். கோசலையோ, பரதன் மீதும் ஒரளவு ஐயம் கொண்டிருந் தாள். ஆனால், அவன் பேசிய பேச்சுக்களால் மனம் முற்றி லும் மாறிவிட்டாள் கோசலை. பரதனை நோக்கி மனம் குளிர்ந்து,

'முன்னை கின்குல முதலி னோர்கள்தாம்

நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்?

மன்னவர் மன்னவ!” என்று வாழ்த்தினாள்.

3. (கம்பன்-2220)

இவ்வாறு கோசலையால் பாராட்டப்பெற்ற பரதனை ஏன் குகன் இவ்வளவு இழிவாக நினைக்கிறான்? பரதனை இதற்கு முன்னர்க் குகன் கண்டதும் இல்லையே! காணா திருப்பவும், பரதன்மேல் இத்துணைக் கோபம் வரக் காரணம் யாதாய் இருக்கலாம்? மேலும் பரதன் எந்த நோக்கத்துடன் வருகிறான் என்பதையும் குகன் அறிய வில்லை; அறிய முற்படவும் இல்லை. இராமன்மேல் போர் தொடுக்கும் விருப்பம் இல்லாமலும் படையுடன் பரதன் வரக்கூடும் என்பதை ஏனோ குகன் நினைந்து பார்க்க வில்லை? ஏன் படையுடன் வரவேண்டும்' என்ற ஐயங் கூட அவன் மனத்தில் தோன்றியதாகத் தெரியவில்லை. அதற்கு மறுதலையாக பிரதனைப்பற்றியும் அவனுடைய வருகை பற்றியும் முற்றிலும் அறிந்தவன் போலக் குகன்