பக்கம்:தம்பியர் இருவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தம்பியர் இருவர்

பேசுவது சற்று வியப்பையே தருகிறது. வஞ்சனையால் அரசு எய்திய மன்னர்,” முன்னவன் என்றும் நினைந் திலன்', 'புவி ஆள்பவன்' என்பன பரதனைப்பற்றிக் குகன் கொண்ட முடிவுகள். 'தோழமை தந்தானாகிய இராமன்மேல் சேனைபோவது என் உயிர் போன பிறகல் லவா?’ என்பது பரதனுடைய படை வருகைக்குக் குகன் கற்பித்த காரணம். இராமன்மேல் படை எடுப்பதல்லாமல், அவனை அன்புடன் மீட்டும் அழைத்துச் செல்லும் நோக் குடனும் பரதன் வரக்கூடும் என்பது குகனுடைய மனத்தில் படவேயில்லை!

முன்பின் அறியாத பரதனைப்பற்றி இத்தகைய முடிவு கள் குகன் மனத்தில் தோன்றக் கார்ண்ம் யாது? காரணம் ஒன்றாகத்தான் இருத்தல் கூடும். பரதனைப்பற்றிய மிகத் தவறானவையும், மெய்ம்மைக்கு மாறுபட்டவையுமான கருத்துகளைக் குகன் முன்ன்மே பெற்றிருந்தான். இக் கருத்துகளைக் குகன் யாண்டுப் பெற்றான்? இராம னுடைய வரலாற்றை அவன் எப்பொழுது அறிந்தானோ அப்பொழுதுதானே பரதனைப்பற்றியும் அறிந்திருத்தல் கூடும்? ஆம்; குகனுக்கு இராமன் காடு வந்த வரலாற்றை யார் கூறினர்? இளையவனாகிய இலக்குவனே கூறினான். எனவே, பரதனைப்பற்றியும் இலக்குவனே கூறியிருத்தல் வேண்டும். பரதனைப்பற்றி இலக்குவன் எப்பொழுதுமே தவறான எண்ணம் கொண்டிருந்தான். எனவே, அவன் தான் கொண்ட தவறான கருத்தைத்தானே குகனுக்கும் கூறியிருத்தல் வேண்டும்? பரதனுடைய வருகை பற்றி அவனை முன்பின் தெரியாத குகன் கூறியன ஒரு புறமிருக் கட்டும். இளமையிலிருந்தே அவனுடன் பிறந்து வளர்ந்த இலக்குவன்கூட அன்றோ அறியமுடியவில்லை!. பரதன் படை எடுத்து வருகிறான் என்றே இலக்குவனும் முடிவு செய்து போருக்குச் சித்தமாகிறான். - -

எனவே, பரதன்மேல் இத்துணைத் தவறான கருத் துடைய இலக்வகுன் பரதனைப் பற்றிக் குகனிடம் கூறி