பக்கம்:தம்பியர் இருவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

բար

அ. ச. ஞானசம்பந்தன் 37

னான். குகன் அதை நம்பாமல் யாது செய்வது? அவன் கண் எதிரே இலக்குவன் நிற்கிறான். எவ்வாறு? வில்லை ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும் கங்குல் எல்லை காண்பளவும் பனம் இமைப்பிலனாக நிற்கிறான். இக் காட்சி மூலம் இராமன் மேல் இலக்குவன் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைக் குகன் நேரே காண்கிறான். இந்த நிலையில் இலக்குவன் சொற்களை நம்பாமல் இருக்க முடியுமா? மேலும் இராமன் காடு செல்வதால் உடனடி யாகப் பயன் அடைபவன் பரதன் அல்லனோ? எனவே, பரதன் தீயவன் என்று இலக்குவன் கூறினால், குகன் அதனை ஏற்றுக் கொள்வதில் தன்டை யாது? தான் ஆளும் நாட்டின் எல்லையிற்கூட இராமன் இருக்கக் கூடாது என்ற காரணத்தாலேதான் அவனைக் காட்டிற்கு அனுப்பி விட்டான் பரதன் என்றுதானே குகன் நினைப்பான்? அதற்கு ஏற்றாற்போல இப்பொழுது பரதன் படையுடன் வந்தான் என்றால், அண்ணனை அழிக்கத்தான் புறப்பட்டு விட்டான் என்றே குகன் நினைக்கிறான். வேறு காரணம் பற்றியும் பரதன் வருதல் கூடும் என்ற நினைவே அவ் வேடர் தலைவனுக்குத் தோன்றக் காரணம் இல்லை.

அடுத்து அவன் பேசிய சொற்கள் படிப்படியாகப் பரதனைக் தாழ்த்திக் கொண்டே செல்லக் காண்கிறோம். 'வஞ்சனையால் அரசு எய்திய மன்னர்' என்ற குகன் சொற்களால் இலக்குவன் நடந்தவற்றை எவ்வளவு திரித்துக் கூறியுளளான் என்பதை அறிகிறோம். தாய் வரம் கேட்டதும், தந்தை அதனை சந்ததும் முறைப்படி நடந்தன என்பதை இலக்குவன் உணரவில்லை. உணர்ந் திருப்பின், தாய் கொடியவள் என்று கூறுவானே தவிர, வஞ்சனை செய்தாள் என்று கூற முறை இல்லை. ஒரு வேளை வஞ்சனை செய்ததாகக் கூறினாலும், தசரதன் மேலேதான் அக்குறையைக் கூறமுடியும். அவன்தான் இராமனை அழைத்து முதல் நாள் முடி கவிப்பதாகக் கூறி விட்டு, மறுநாள் காடு செல்ல உத்தரவிட்டான். எனவே,