பக்கம்:தம்பியர் இருவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தம்பியர் இருவர்

இலக்குவன் கூறுவதுபோல வஞ்சனை நடைபெற்றதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கு முற்றிலும் தசரதனே காரணனாவான். கொடிய செயல் என்று அறிந்திருந்தும் மகனுக்கும் முடியைப் பெற்றுக் கொண்டு இராமனைக் காடு செல்ல வேண்டுமென்று கட்டளையிட்டது கைகேயி யின் செயல்தான். ஆனால், அது கொடுமை உடையது என்று கூறலாமே தவிர, வஞ்சனை. ஆமாறு எங்ங்னம்? இது இலக்குவன் அறியாதது அன்று. இருந்தும், குகன் மனத்தில் (பரதன் வஞ்சனை உடையவன் என்னும்) இந்த எண்ணம் தோன்றுமாறு இலக்குவன் பேசினான் என்றால், அது யாருடைய தவறு? இலக்குவன் இராமன்மேல் கொண்ட அன்பால் தன்னையும் அறியாமல் பரதனாகிய உத்த மனுக்குத் தீங்கை இழைத்துவிட்டான். இலக்குவன் செய்த இந்தத் தவறு காரணமாகக் குகனும் பரதனைப் பற்றி " வஞ்சனையால் அரசு எய்திய மன்னர்’ என்று முடிவு செய்துவிட்டான். .

இதனை அடுத்துக் குகன் கூறிய சொற்கள், "முன்னவன் என்றும் கினைந்திலன், மொய்புலி

. . . . . அன்னான் ஓர் பின்னவன் நின்றனன் என்றிலன்.” -

- (கம்பன்-2318) என்பவை. இதனால், பரதனை மிகவும் தாழ்த்தி விடு வதுடன் அறியாமை உடையவனாகவும் செய்து விடுகிறான் குகன். இராமனை முன் பிறந்தான் என்ற கருத்தினாலாவது விட்டு வைத்திருக்க வேண்டும் பரதன். தன்னுடன் பிறந்த வனுக்குச் செய்ய வேண்டிய கடமையை மறுத்தலினும் தீங்கு யாதுளது? முன்னே பிறந்த தமையனுடைய உரிமையை மதியாமல் காடு செலுத்திய தம்பியாகிய பரதன் எங்கே, தன் உரிமையைத் தம்பியாகிய பரதனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுக் காடு சேர்ந்த இராமன் எங்கே! இராமன் பண்பாட்டில் எவ்வளவு ஒப்புயர்வு அற்றவனாகக் குகன் கருத்தில் படுகிறானோ, அவ்வளவு பண்பு இல்லாத