பக்கம்:தம்பியர் இருவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 39.

வனாகப் பரதன் படுகிறான். முன்னவன் என்று நினைந்து கூடப் பார்க்கவில்லை என்ற சொற்களில் அவ்வள்வு வெறுப் பையும் கொட்டி விடுகிறான் வஞ்சகம் அற்றவனாகிய குகன்! அடுத்த அடியில் பரதனை அறியாமையின் சிகரத் தில் இருப்பவனாவும் அல்லவா முடிவு செய்து விடுகிறான்! மொய்புலி அன்னான் ஒர் பின்னவன் நின்றனன் என்றிலன்' என்ற அடியைக் கூர்ந்து நோக்க வேண்டும். குகனுடைய கண்களில் மனைவியை உடன் அழைத்துக் கொண்டு காடு வந்துள்ள இராமனைவிட இலக்குவன் வலிமையுடைய வனாகக் காட்சி அளிக்கிறான் போலும்! இலக்குவனுடன் சிறிது நேரமே பழகிய போதிலும் அவனுடைய வீரத்தை ஒரளவு அறிந்து கொண்டுள்ளான் குகன். எனவே. அவனைப் புலிக்கு ஒப்பிடுகிறான். ஆனால், இராமனுடைய அமைதியே வடிவான் முகமும் பேச்சும் குகன்ை ஓரள்வு ஏமாற்றிவிட்டன போலும் முன்னவன் என்றாவது இந்தப் பரதன் நினைந்து பார்த்தானா? என்று அவன் கூறும்பொழுது இராமன் மேல் இரக்கம் கொண்ட் வனுடைய மனப்பான்மையை நாம் அறிகிறோம். இந்த ஒரு காரணத்திற்காகவேனும் அவனை விட்டுவிட்க்' கூடாதா?’ என்ற ஒசைப் பொருள் அச்சொற்களில் ஒலிக் கின்றது. ஆனால், இலக்குவன் இருக்கிறான் என்பதைக் கூடவா பரதன் மறந்துவிட்டான்! என்று வியப்படை கிறான் குகன்; இலக்குவ்னுக்குப் பதில்கூற இப்பட்ை முழுவதும் போதாதே! என்று நினைக்கிறான்.

அண்ணனை வென்றுவிடலாம் என்று பரதன் மன்ப் பால் குடித்துக் கொண்டு ஒரு வேளை வந்திருக்கலாம். ஆனால், இலக்குவனை அவன் நினைத்துப் பார்க்க வில்லை போலும் பின்னவன் நின்றனன்' என்ற சொற் களில் ஒர் அழகு விளங்குகிறது. அந்த இலக்குவனும் எந்த நேரத்தில் எந்தத் தீங்கு வரும் என்று எதிர் பார்த்தே எப் பொழுதும் போர்க்கோலத்துடன் நிற்கிறான். அமர்ந்த்ோ: உறங்கியோ இருந்துவிட்டால், எழுந்து போருக்குத் தயார்