பக்கம்:தம்பியர் இருவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தம்பியர் இருவர்

செய்து கொள்ளக் காலம் தாழ்க்கும் என்று அஞ்சிப் போலும் எப்பொழுதும் நின்று கொண்டே இருக்கிறான்!. அவனைப் குறைத்து மதித்து விட்டே இந்தப் பைத்தியக் காரப் பரதன் வந்துள்ளான் என்று நினைக்கிறான் குகன். இலக்குவன் வன்மையைக் குறைத்து மதித்துவிட்ட பரதனது அறியாமையை நினைக்கும் பொழுது குகனுக்கு இகைப்புக்கூட வருகிறது. ஆனால், அடுத்த கணத்தில் அது சினமாக மாறுகிறது. பரதனுடைய உடன் பிறந்தவர்களே இலக்குவனும் இராமனும். இராமனிடம் அன்பில்லா விட்டாலும் இலக்குவன் வன்மையைக் குறைத்து மதித்து விட்டாலும் மதித்து விடட்டும். அதனால் தன்னையும் தன் ப்டை வன்மையையும் குறைத்து மதிக்கப் பரதனுக்கு உரிமை ஏது என்று சீறுகிறான் குகன். தம்பியாகிய பரதன் இராமனையும் இலக்குவனையும் எவ்வாறு வேண்டுமாயி இம் மதிக்கட்டும். அது அவனுடைய பொறுப்பு. ஆனால், "என் இவன் என்னை இகழ்ந்தது? இவ்வெல்லை கடந்து அன்றோ?' என்கிறான் குகன். தன்னுடைய இருப்பையும், தான் இராமனுக்கு உற்ற துணைவனாய் இருப்பதையும் பரதன் அறியவில்லை போலும் அறிந்திருந் த்ர்ல், இவ்வாறு துணிந்து புறப்பட்டு வருவானா? பரதன் படையுடன் புறப்பட்டுவிட்டமையின் தன்னை இகழ்ந்து விட்டதாகவே நினைக்கிறான் அவ்வீரனாகிய வேடன். ஒருவேள்ை பரதன் அதிக வலிமை பெற்ற மன்னவனாயின், குகன் போன்ற சிற்றரசன் இருப்பதைப் பொருட்படுத்தா மல் புறப்பட்டு வரலாம். ஆனால், எத்துணை வலியுடைய ராயினும், காலம் அறிதல், இடன் அறிதல் முதலியன அவரிடம் அமையாவிடின் பிழைதான் எஞ்சும்.

க்ால் ஆழ் களரில் கரிஅடும் கண் அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு.” • ,

என்ற குறள் இடம் அறிதலின் சிறப்பைத்தானே கூறுகிறது:

பாகனுக்கு அடங்காத யானை கூடக் கால்கள் அமிழ்ந்து