பக்கம்:தம்பியர் இருவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 4 T

போகக் கூடிய சேற் றுநிலத்தில் நரியால் வெலல்ப்படுமாம்.

இந்த அடிப்படை உண்மை கூடவா பரதனுக்குத் தெரிய

வில்லை? அயோத்தியில் யானை போல இருக்கும் பரதன் கூடக் குகனுடைய எல்லையில் பூனையாக அல்லவா மாறி விடுவன்? இத்னை வலியுறுத்தவே போலும் குகன்,

"என்னை இவன் இகழ்வது இந்த எல்லையைக் கடந்து அன்றோ?' என்று கூறுகிறான்! பரதனாகிய மன்னவனுக்கு. அரசியலின் அடிப்படைச் சூழ்ச்சிகள் கூடத் தெரியவில்லை. என்ற முடிவுக்கு வந்துவிட்டான் குகன்.

பரதனைப்பற்றிக் குகன் கொண்ட இந்த முடிவுகள் பொதுவாக அரசர்களைப்பற்றியே சில தவறான எண்ணங் களை அவன் மனத்தில் தோற்றுவித்து விட்டன. அரசராக வருபவர் ஏனைய மனிதரினின்றும் தம்மை வேறு பிரித்துக் கொண்டு தம்மை உயர்ந்தவராக மதித்துக்கொள்ளுகின்ற னர். மன்னர்க்கு நீதி ஒரு வகை; ஏனை மார்ந்தர்க்கு நீதி ஒருவகை, (பாஞ், சபதம்) என்று வியாழ முனிவன் கூறி யதை அவர்கள் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். எனவே, ஏனைய மனிதர்கட்குரிய சட்டதிட்டங்களும் க்டமைகளும் தமக்கு இல்லை என்றுகூடக் கருதத் தலைப் பட்டனர். சாதாரண மனிதர்கள் செய்வதற்கு அஞ்சக் கூடிய செயல்களை அரசர்கள் துணிந்து செய்வதன் கருத்து யாதாய் இருக்கும் புண்ணியம், பாவம் என்ற இரண்டு ஆண்டு என்பதும், அவை தமக்கும் உண்டு என்பதும் இவ் வ்ரசர்கட்குப் படுவதில்லை போலும்! அதுதான் போகட்டும் என்றால், பிறரால் பழிக்கப்படும் செயல்களைச் செய்யக் கூடாது என்பது கூடவா இவர்கட்குத் தெரியாமற்போய் விட்டது: - -

o 'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” -

. - (திரு. 656), என்ற குறளின் கட்டளை அரசர்கட்கு இல்லையா? ஆம்! சாதாரண மனிதராக உள்ளவரையில் ஒருவர் கடைப்