பக்கம்:தம்பியர் இருவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 42 தம்பியர் இருவர்

பிடித்து ஒழுகும் குறிக்கோளும் பண்பாடும். அதிகாரம் கைக்கு வந்த பொழுது மறந்துவிடுதல் உலக இயற்கைதான் அந்த நியதியைத் தானே குறளும் பேசுகிறது?

'எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர்.” . --

(திரு. 5 4)

என்ற குறளில் எத்துணை நல்லவர்களாயினும், அதிகாரம் கையில் கிடைத்தபின் மனம் மாறிவிடுதல் உலக இயல்பு என்பது கூறப்பட்டுள்ளது. இதனைத் தான் கூனியும் கைகேயிக்கு எடுத்துக் கூறுகிறாள்.

'அறம் கி ரம்பிய அருளுடைய அருந்தவர்க் கேனும்

பெறல்.அ ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்.'

(கம்பன்- 176).

பல பெரியார்களாலும் எடுத்துக் கூறப்பட்ட இந்த உண்மை அவர்கள் அனுபவ ஞானத்தால் கண்ட ஒன்று தானே! எனவே, பரதனும் முடி தனக்கு உறுதியானவுடன். பழி பாவம் என்பவற்றைக் காற்றிற் பறக்கவிட்டுவிட்டான் என்று கருதுகிறான் குகன். இந்த நினைவில் குகன் த்ானும் ஒர் அரசன் என்பதைக்கூட மறந்துவிட்டான். ஆம்: வேட்டுவர் குலத்தில் வந்து பிறர் நாகரிகம் என்று கருதுவதை அறியாத அவனுக்குப் பழி பாவம் என்பவை மிகவும் பெரியனவாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால், நாகரிகம் முதிர்ந்தவர்களிடம் பழி பாவம் என்ற இரண்டின் ம்ாட்டும் கொண்ட அச்சம் இராது போலும் என்று குகன் அன்று வருந்தினான்! இன்றும் அது உண்மையாய் இருத் தலைக் காண்கிறோம். நாகரிகத்தில் தம்மை மேம்பட்டவர் என்று கூறிக்கொள்ளும் வெள்ளை இனத்தார் தாமே இன்று இரண்டையும் கண்டு அஞ்சாமல் வாழ்க்கை நடத்து கின்றனர்? இவற்றை யெல்லாம் நினைத்துப் பார்த்த குகன் இதோ பேசுகிறான். o