பக்கம்:தம்பியர் இருவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 43'

பாவமும் கின்ற பெரும்பழி யும்பகை நண்போடும் ---

ஏவமும் என்பவை மண்ணுலகு ஆள்பவர் எண்ணாரோ?, ஆவது போகஎன் ஆள்வினைத் தோழமை தந்தான்மேல் போவது சேனையும் ஆருயி ரும்கொடு போயன்றோ?”

(கம்பன்-2319)

இப்பாடல்கள் பலவற்றிலும் வரும் ஒரு கருத்து நோக்குதற்கு உரியது. செஞ்சரம் என்பன தீ உமிழ் கின்றன செல்லாவோ? மன்னவர் நெஞ்சினில் வேடர்.விடும் சரம் வாயாவோ? என்ற சொற்கள் மூலம் குகனுடைய எண்ணம் ஒருவாறு புலனாகிறது. பரதன் தன்னையும் தன். படையையும் வேடர்கள் என்ற ஒரு காரணத்தால் குறைத்து மதித்துவிட்டான் என்ற எண்ணம் குகன் மனத்தில் வேர் ஊன்றிவிட்டது. எனவே, அவன் அடிக்கடி, வேடர்கள் கூட அரசர்களைக் கொல்ல முடியும், என்று கூறுகிறான். அன்றியும், அரசனாய்ப் பிறந்து அச்செல்வத் திற்கு உரிமை பூண்டிருந்த இராமனே தன்னை மதித்துத் தம்பி என்று உரிமை கொண்டாடுகையில், அரசச் செல்வத் தைப் பறித்துக் கொண்டு அதனால் அரசப் பதவியை அடைந்ததாகத் தன்னால் கருதப்பட்ட பரதன் தன்னை இகழ்ந்து படையுடன் புறப்பட்டதைக் குகனால் பொறுக்க முடியவில்லை. எனவே, மாறி மாறி, அவன் அரசனாகவே இருப்பினும், என் அம்புகள் அவனைக் கொல்லும், என்று: கூறுகிறான் குகன்.

ஆற்றின் எதிர்க்கரையில் நிற்கும் பரதனுடைய சேனையைப் பார்க்கப் பார்க்கக் குகனுடைய கோபம் பன் மடங்காகப் பெருகுகிறது. இராமனையும் பரதனையும் மீட்டும் மீட்டும் தன் மனத்துள் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அப்புள்ளிஞர் வேந்தன். ஆட்சி செலுத்தும் நாட்டை விருப்புட்ன் தந்துவிட்டுக் காடு புகுந்த இராமன் எங்கே, அவ்விராமனை இங்கும் இருக்க ஒட்டாமல் படை கொண்டு துரத்தும் பரதன் எங்கே தன்னுடைய நாட்டில் இராமன் இருத்தல் கூடாது எனப் பரதன் இராமனைக் காட்டிற்கு