பக்கம்:தம்பியர் இருவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தம்பியர் இருவர்

அனுப்பியது சரி. அனுப்பியது சரியானாலும் தவறானா இலும் அது அண்ணன் தம்பி இருவரிடையே நடைபெற்ற போராட்டமாகலின் அது பற்றிக் குகன் கவலைப்பட வில்லை. காட்டிற்குப் போய்விடு' எனக் கட்டளை இட்ட தாயைவிடக் கொடியவன் போலும் இப்பரதன் தாயாவது இராமனைக் காட்டில் வாழ அனுமதித்தாள். மகன் அக் காட்டையும் விட்டுத் துரத்த முடிவு செய்து + வந்து விட்டானே! ஆனால், காடு யாருடையது? இந்தக் காட்டி லும் இராமன் இருக்கக் கூடாது என்று கூறப் பரதனுக்கு என்ன உரிமை வந்துவிட்டது? அவனுடைய அதிகாரத் துக்கு உட்படாதது மட்டுமன்று இக்காடு வேடர்கள் ஆணைக்கு உள்ளடங்கி இருக்கும் பகுதியாகும் இக்கர்ட்டில் அல்லவா இராமன் வந்து தங்கினான்: இதனை மனத்துள் கொண்ட குகன், நாம் ஆளும் காடு' என்று கூறுகிறான். இதனை அடுத்துக் குகனுக்கும் புதிய ஓர் ஆராய்ச்சி பிறக்கிறது. - -

இலக்குவன் குகனிடம் பேசினான்; இராமன் காடு வர நேர்ந்த வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறினான். அதனைக் கேட்ட குகனுக்கு இராமன்மேல் அன்பு பிறந்தது; அவனை (இலக்குவன் கூற்றுப்படி) வஞ்சித்த பரதன் மேல் வெறுப்பும் பிறந்தது. ஆனாலும், ஒரு தந்தை யின் மக்களான இராமன் பரதன் இவருள் நடைபெற்ற உரிமைப் போராட்டத்தில் தலையிட அவன் விரும்ப வில்லை. நியாயமும் உரிமையும் இராமன்பால் உள்ளன எனினும், தன்னை இராமன் ஒன்றும் வேண்டவில்லை யன்றேர் அவ்வாறு இருக்கக் குகன் எவ்வாறு தலை யிடுவது? மேலும், குகனுடைய ஆட்சி எல்லைக்கு அப்பால் உள்ள நாட்டில் ந ைட பெற்ற போராட்டமாகும் இது, எனவே, எவ்வளவு தான் கருணை ஒரு புறம் இருப் பினும், குகன் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்து விட்டான். ஆனால், இப்பொழுது நிலைமை மாறி விட்டது. பரதனால் துரத்தப்பட்ட இராமன் குகனுடைய