பக்கம்:தம்பியர் இருவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 45

எல்லையில் இருக்கிறான். எனவே, தன்னுடைய நாட்டில் விருந்தினனாய்ப் புகுந்த அவனைக் காப்பது குகன் கடமை. அதனோடு நில்லாமல் இராமனுக்குத் தீங்கிழைத்த பரதனும் குகனுடைய எல்லைக்குள் வந்து விட்டான், இராமனுக்கு மேலும் தீங்கு செய்யும் நோக்குடன். இந்த நிலையில் குகன் தன் கடமையை நன்கு உணர்கிறான்.

இராமன் தன்பால் வந்ததிலிருத்து அவனுக்கு எவ்வாறாயினும் அயோத்தி அரசை மீட்டுத் தரவேண்டும் என்று குகன் விரும்பினான். சந்தர்ப்பம் சரியாக இன்மை யின், அவன் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், பரதன் தனது எல்லையில் இருக்கும்போது அவன் எதிர்பார்த்த சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகக் குகன் கருதுகிறான். இந்த நிலையில் பரதனுடன் போர் தொடுத்து அவனை வென் றால் இராமன் கூடக் குகன்பால் தவறு கூற முடியாது. பரதனே வலுச் சண்டைக்கு வந்திருக்கும் பொழுது குகன் அவனுடன் போர் தொடுப்பதில் தவறு இல்லை. அன்றோ? அறமே வடிவான இராமன் நாட்டை இழந்தான்; மறமே வடிவான பரதன் அதற்குக் காரணனாவான். இப்போது அந்தப் பரதன் குகன் ஆளுகைக்குட்பட்ட எல்லையில் வாழும் இராமனைத் துரத்த வந்திருக்கிறான். குகன் எல்லைக்குள் வரப் பரதனுக்கு உரிமை ஏது? எனவே, குகன் இதனையே ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு இராமனுக்கு அவனது அயோத்தி அரசை மீட்டுத் தர விரும்புகிறான்; அதிலும், இராமன் அரசை இழந்தான்; ஆனால், வேடர்கள் அவ்வரசை மீட்டுத் தந்தார்கள்,' என்ற புகழையும் அதன் மூலம் அடைய விரும்புகிறான். இத்தனைக் கருத்துக்களும் கம்ப நாடனுடைய ஒரு பாடலைப் படிக்கும்பொழுது தோன்றுகின்றன. -

'ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள

வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவிரோ! நாடு கொடுத்தளன் நாயக னுக்கு இவர் நாம்ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணிரோ?”

(கம்பன்-2324)