பக்கம்:தம்பியர் இருவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 - தம்பியர் இருவர்

. எதிர்க் கரைபில் காணப்படும் படை மிகப் பெரிது என்பது அப்படை எழுப்பும் துகள் அல்லது துளசி யினாலேயே அறிந்து கொள்ள முடிகிறது. என்றாலும், ஒரு துாய வீரனுக்கு அது கண்டு அச்சம் தோன்றுவதே இல்லை. பகைவனது படைப் பலத்தைத் குறைத்து மதிப்பது தீமை என்பதும் அறநூல் கூறிய விதி.

'வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்

துணைவலியும் துக்கிச் செயல்.’

(திரு. 471) இத்தகைய அடிப்படையான உண்மையைக் குகன் மறந்து விட்டானா? மறந்து விடல்லை. பரதனின் படை

வலிமையை நன்கு அறிந்து கொண்டுள்ளான். எனினும், இரண்டு காாணங்களால் அவர்களை வெல்ல முடியும் என்று நினைத்து முடிவு செய்கிறான். ஒன்று, பரதன் தன்னுடைய 'எல்லையைத் தாண்டி இப்பொழுது குகனுடைய எல்லை யில் இருக்கிறான். எனவே, குகனுக்கு இது ஒரு வாய்ப்பு. இரண்டாவது, இரு படைகட்கும் நடுவே இயற்கை அரணாய் அமைந்துள்ளது கங்கையாறு. எத்துணைப் பெரிய படையைப் பரதன் பெற்றிருந்தாலும், கங்கை யாற்றைத் தாண்டாமல் யாது செய்ய இயலும்? கங்கை 1யைத் தாண்ட வேண்டும் எனில், அது குகனுடைய படகு இல்லாமல் இயலாதன்றோ? இவ்விரண்டு காரணங்களாலும் பரதனுடைய படையை எவ்வாற்றானும் வென்று விடலா

மென்று குகன் நினைக்கிறான். -

'செஞ்சரம் என்பன தீஉமிழ் கின்றன செல்லாவோ?’’

(2316) 'ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?

(2317) ‘என் இவன் என்னை இகழ்ந்தது.இவ் - வெல்லை கடந்தன்றோ?' (23.18)

'மருந்தெனின் அன்று உயர் வண்புகழ் -

கொண்டது மாயேனோ? - (2319).