பக்கம்:தம்பியர் இருவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 47

'தும்பியும் மாவும் மிடைந்த பெரும்படை சூழ்வாரும்

வம்பியல் தாரிவர் வாள்வலி கங்கை கடந்தன்றோ?”

}(2020)

என்ற இவ்வடிகள் பரதனுடைய படை வன்மையைக் குகன் நன்கு அறிந்திருந்தான் என்பதையும், கங்கை குறுக்கே இருத்தலின் இப்படை வலி பயனற்றுப் போவதையும் அறிந்திருந்தான் என்பதையும் அறிவிக்கின்றன.

இவ்விரண்டு காரணங்களுடன் குகனுக்குத் தன்னிடத் தும் தன் படையினிடத்தும் மிகுந்த நம்பிக்கை இருந்ததை யும் அறிய முடிகிறது. பரதனுடைய படை எத்துணைப் பெரிதாயிருப்பினும், இராம இலக்குவர்களுடைய வில் லாற்றலின் முன்பு இப்படை ஒரு போதும் எதிர்த்து நிற்க இயவாது எனக் கூறுகிறான். அதனுடன் நிறுத்தாமல், மேலே அவன் பேசுவதிலிருந்து அவனுடைய தன்னம் பிக்கையை நாம் அறிய முடிகிறது. அவர்கட்கு இப்படை ஒரு பொருட்டன்று என்பது ஒரு புறம் இருக்கட்டும். தேவர்களே எதிர்த்துவரினும் அவர்களுடைய குடரைச் குறையாட மாட்டேனா யான்? என்று கூறும் முறையில்

போன படைத்தலை வீரர் தமக்கு இரை போதாஇச் சேனை கிடுக்கிடு; தேவர் வரின்சிலை மாமேகம் சோனை படக்குடர் சூறை படச்சுடர் வாளோடும் தானை படத்தனி யானை படக்கடை சாயேனோ”

o (கம்பன்-2322)

அன்றியும்,

'கின்ற கொடைக்கைஎன் அன்பன் உடுக்க நெடுஞ்சீரை அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தைஎன் அம்பாலே கொன்று குவித்த கிணங்கொள் பிணக்குவை * .

- - கொண்டுஓடித் துன்று திரைக்கடல் கங்கை மடுத்துஇடை தூராதோ?”

(கம்பன்-2:323)