பக்கம்:தம்பியர் இருவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& தம்பியர் இருவர்

என்று குகன் கூறும் பொழுது தன் வலிமையின் மேல் அப் பெருமகன் கொண்டிருந்த பெரு நம்பிக்கை வெளியாகிறது. மேலும், அவனுடைய வெற்றி உறுதி என்ற எண்ணத்தின் மற்றொரு பகுதியும் இப்பாடலில் வெளியாகிறது.

எத்துணைப் படை வலிமை உடையவராயினும் அற முறை பிறழ்ந்தவர்கட்கு வெற்றி இல்லை என்பது தமிழர் கண்ட பேருண்மை. இக்கருத்தை மருதன் இளநாகனார் என்ற புலவர் புறநானூற்றில் ஒரு பாடலில் நன்கு விளக்கு கிறார்.

கடுஞ்சினத்த கொல்களிறும்

கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய கிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என r நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.”

(புறம், 55) கோபத்துடன் கொல்லும் இயல்புடைய யானைப் படை யுடன், வேகமாகச் செல்லும் செருக்கை உடைய குதிரைப் படையும், நெடிய கொடி கட்டிய பெரிய தேர்ப்படையும், நெஞ்சு வலிமையுடைய காலாள் படையும் மிகுதியாகப் பெற்றிருப்பினும், ஒர் அரசனுடைய வெற்றி அறத்தையே அடிப்படையாகக் கொண்டது, என்கிறார் புலவர் இப் பாடலில். இதே காரணத்தைக் குகனும் குறிப்பால் கூறுகிறான். என் அன்பன் உடுக்க நெடுஞ்சீரை அன்று கொடுத்தவள் மைந்தர்’ என்று அவன் பரதனைக் குறிப் பிடுவது கூர்ந்து நோக்கற்குரியது. என்று இராமனுக்கு மரவுரி கொடுத்துவிட்டு அவனுடைய அரசைப் பறித்துத் தன்மகனாகிய பரதனுக்குக் கைகேயி தந்தாளோ, அன்றே அயோத்தி அரசில் அறம் விடை பெற்றுக்கொண்டது என்று குகன் நினைக்கிறான். 'பாவமும் நின்ற பெரும் பழியும்...... ஏவமும் என்பவை மண்ணுலகு ஆள்பவர் எண்ணாரோ?” என்று முன்னரும் குகன் குறிப்பிட்டது