பக்கம்:தம்பியர் இருவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 소 9

பரதனைக் குறித்தேயன்றோ? எனவே, பரதனுடைய கட்சியில் அறமில்லையாகலின், அவனுக்கு வெற்றி கிட்ட முடியாது என உறுதியாக நம்புகிறான் குகன். இதனா லேயே தும்பியும் மாவும் மிடைந்த பெரும்படை பரத னிடம் இருக்கிறது என்று அறிந்தும், தன்னிடம் யானை குதிரை முதலிய படைகள் இல்லை என்பது தெரிந்திருந்தும் குகன் பரதனை வென்றுவிட முடியும் என்று கருதுகிறான்.

'ஏமுனை உற்றிடில் ஏழு கடற்படை என்றாலும்

ஆமுனை யில்சிறு கூழென இப்பொழுது ஆகாதோ?”

(கம்பன்-235 2)

என்று கூறும் குகனுடைய நெஞ்ச உறுதி போற்றற் குரியது. -

பரதனைப்பற்றிக் குகன் இம்முறையில் நினைந்து பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் எதிர்க்கரையில் பரதனும் சுமந்திரனும் பேசிக்கொண்டிருக்கின்றனர். புதியவனாய் வந்துள்ள பரதனுக்குக் குகனைப்பற்றி அறிமுகம் செய்து வைக்கிறான் சுமந்திரனாகிய அமைச்சன். கங்கை இருகரையுடயான் கணக்கிறந்த நாவாயான் உங்கள் குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன் உயர்

தோளான் வெங்களியின் ஏறுஅனையான் விற்பிடித்த வேலையினான் கொங்குஅலரும் நறுந்தண்தார்க் குகன்என்னும்

குறியுடையான் கல்காணும் திண்மையான் கரைகாணாக் காதலான்

அல்காணிற் கண்டு.அனைய அழகு அமைந்த மேனியான்' . (கம்பன்-2327, 28)

குகனைப்பற்றிச் சுமந்திரன் தந்த குறிப்புகளில் மிகச் சிறந்

தது இராமனுக்குக் குகன் உயிர்த்துணைவன்', என்பது

தான். இந்த ஒரு குறிப்பே பரதனை அவன் பக்கலில்

த.-4 - .