பக்கம்:தம்பியர் இருவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தம்பியர் இருவர்

கொண்டு சேர்க்கப் போதுமானதாய் இருந்தது. தன்னு டைய நிலைமைக்குக் குகனைத் தான் சென்று காண்பது முறையா என்றுகூட ஆயாமல், பரதன், யானே சென்று அவன் காண்பேன்’ என்று புறப்பட்டு, ஆற்றின் கரை யோரம் வந்து விட்டான். குகன் தன்னை வந்து காணு முன்னர்த் தானே அவனைச் சென்று காணவேண்டும் என்று பரதன் புறப்பட்டுவிட்டான். அருமைத் தம்பி சத்துருக் கனனும் உடன் வந்துவிட்டான். ஆனால், கங்கை ஆறு தடை செய்துவிட்டது. அவ்வாற்றைக் கடந்து குகனைக் காண வேண்டும். எனினும், அதுவும் குகனுடைய உதவி இல்லாமல் இயலாததாய் இருந்தது. எனவே, பரதனும் இளவலும் ஆற்றின் எதிர்க்கரையில் நின்றுவிட்டனர். இக்கரையில் நிற்கும் குகன் எதிர்க்கரையில் நின்ற சோதரர் களை இப்பொழுதுதான் கண்களால் தெரியக் காண் கிறான்.

'கின்றவனை நோக்கினான் திருமேனி கிலையுணர்ந்தான்

துன்றுகரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண்ணென்றான்.” (கம்பன்-2330)

பரதனைப்பற்றி இத்துணை வன்கண்மையுடன் குகன் பேசினது அவனை நேரே காணும் முன்பே என்பது இப்பொழுது நன்கு தெரிகிறது. இலக்குவன் சொற்களால் வரையப் பெற்ற பரதவுருவமே இதுவரை குகனுடைய மனத்தின் ஆழத்தில் பதிந்திருந்தது. பரதன் இராமனை விரட்டியதுடன் அமையாது படை கொண்டும் வருதல் போல எதிர்க்கரையில் ஒரு படை வந்தும் தங்கிவிட்டது. எனவே, குகன் தன் எண்ணம் சரியானது என்று நினைத்து இவ்வளவு கடுமையாகப் பேசிவிட்டான். ஆனால், இப்பொழுது எதிர்க்கரையின் ஒரத்தில் வந்து நிற்கும் பரதனை நேரே கண்டுவிட்டான். இவன்தான் பரதன்,' என்று அவனிடம் யாரும் கூறத் தேவை இல்லை. இராம னுடைய வடிவம் அச்சு வார்த்தது போல நிற்கும் பரதனைக் கண்டு பிடிக்கக் குகனுக்கு நீண்ட நேரம் ஆக