பக்கம்:தம்பியர் இருவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 5互

வில்லை. பரதன் என்று அறிந்த பிறகுதான் அவனைக் கூர்ந்து நோக்கினான் குகன். என்ன வியப்பு படை எடுத்து வருகிறவனுடைய தோற்றமாக இல்லை பரதனுடைய கோலம். குகனுடைய கற்பனையில் உறைகின்ற பரதனுக் கும் இப்பொழுது எதிர்க்கரையில் நிற்கும் பரதனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தொடர்பு இல்லாதது மட்டுமா! முரணான பண்புகள், பரதனுடைய வடிவமாக இங்குக் காட்சி அளிக்கின்றன. இந்த முதற்காட்சியே குகனை வெலவெலத்துப் போகுமாறு செய்துவிட்டது. இதனைத்தான் கவிஞன் எயினர் கோன் துண்னென்றான்' என்ற சொற்களால் பெற வைக்கிறான்.

குகன் தன்னுடைய கண்களாற்கண்ட பரதனுடைய வடிவும் செயலும் இதோ தரப்படுகின்றன. கவிஞனுடைய சொற்களால்.

'வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை

நற்கலையில் மதி.என்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையினின்று இடைவீழ விம்முற்று கின்றுஒழிந்தான்.

'நம்பியும்என் நாயகனை ஒக்கின்றான்; அயல்கின்றான் தம்பியையும் ஒக்கின்றான்; தவவேடம் தலைகின்றான் துன்பம்ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித்

தொழுகின்றான்; எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?’’

(கம்பன்-2331, 32)

மரவுரியை ஆடையாய் அணிந்து தூசு படிந்த உடலை உடையனாய்க் கலையிழந்த மதிபோன்ற முகத்தினனாய்க் கல்லும் உருகும் வண்ணம் துயர் உறுகின்ற பண்பினனாய் உள்ள பரதனைக் கண்ணுற்ற குகனுடைய வில் தானே கீழே வீழ்ந்துவிட்டது. அவனையும் அறியாமல் இந்தப் பரதன் மேல் அன்பு பிறந்தது; விம்மத் தொடங்கிவிட் டான்.பரதனுடைய வடிவம் இராமனைக் குகனுக்கு