பக்கம்:தம்பியர் இருவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தம்பியர் இருவர்

நினைவூட்டியது. அணித்தே நிற்கும் சத்துருக்கனனுடைய வடிவம் இலக்குவனை ஒத்தேயிருக்கிறது. இருவரும் இராமன் சென்ற திசை நோக்கித் தொழுகின்றனர். உடனே குகனுக்குத் தன் செயலில் நாணம் பிறந்துவிட்டது. இத்தகைய பண்பாடு உடைய பரதனிடத்து ஐயங்கொண்டு படைகளை நோக்கிப் பேசிய தன்மேல் குகனுக்கே வருத்தம் உண்டாகிறது. இதுவரை பேசிய அனைத்திற்கும் கழுவாய் காண்பான் போலக் குகன், எம்பெருமான் பின் பிறந்தார் தவறு செய்வார்களோ? என்று கூறுகிறான். பரதனைத் தூரத்தே இருந்து கண்ட அளவிற் பேசிய சொற்களாகவின், இவை மன்னித்தற்கு உரியனவே. குகன் பரதன்மேல் கொண்ட ஐயம் இன்னும் முற்றிலும் நீங்கிவிடவில்லை.

பரதன் உயர்ந்த பண்புடையவன் என்பது இன்னும் குகனுடைய சொற்களில் வெளிப்படவில்லை. அவனால் அறியப்பட்ட இராமனைப்பற்றியே அவன் மீட்டும் பேசு கிறான். இராமன்யின் பிறந்தார் தவறு செய்வார்களா? என்று கேட்கையில் பரதனைக்காட்டிலும் இராமன் புகழே பேசப்படுதலை அறியலாம். பரம்பரையாக அரச உரிமை பெற்றிருந்தமையின், ஒரு மனிதனைப்பற்றி விரைவில் முடிவு செய்துவிட விரும்பவில்லை குகன். பரதனைப் பற்றிய தன் எண்ணங்களை அவன் மாற்றிக்கொண்டாலும், முழுவதும் அதை நம்பி நடந்துவிட அவன் விரும்பவில்லை; எனவே, தன் படைகளை நோக்கிப் புதியதொரு கட்டளை இட்டுச் செல்கிறான். இது வரையில் பகைவன் என்று கருதப்பட்ட பரத னுடைய கண்ணிரை மட்டும் கண்டு தன் முடிவை மாற்றிக்கொள்வது அரசனுக்கு அழகன்று. எனவே, குகன் கூறுகிறான்:

'உண்டு இடுக்கண் ஒன்றுஉடையான் உலையாத அன்புடையான் கொண்டதவ வேடமே

கொண்டிருந்தான் குறிப்பெல்லாம்