பக்கம்:தம்பியர் இருவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 53

கண்டுணர்ந்து பெயர்கின்றேன்; காமின்கள் நெறி' என்னாத் தண்துறையின் நாவாயின்

ஒருதனியே தான்வந்தான்.

(கம்பன்-2333)

'யான் ப ர த னு ைட ய குறிப்பெல்லாம் கண்டு வருகிறேன். அவ்வாறு வருகிற வரையில் நீங்கள் வழிகளை எல்லாம் காவல் செய்து நில்லுங்கள்,' என்று தன் படை கட்குக் கட்டளை இட்டுவிட்டுத் தான் மட்டும் தனியே வருகிறான்.

இதனை அடுத்துள்ள பாடல் ஆழ்ந்து நோக்கற்கு உரியது. பாடலின் பொருளைப் பலர் பலவாறு திரித்துத் தத்தம் மனநிலைக்கு ஏற்பக் கூறுகின்றனர். இப்பாடலில் பரதன், குகன் என்ற இருவரையும் நம் எதிரே நிறுத்து கிறான் கவிஞன், இவர்களுடைய அன்பின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறான். இவ்விருவருள் யார் சிறந்தவர் என்று நாம் கூற முடியாதபடி செய்துவிடுகிறான் கவிஞன். நடுவு நிலைமையோடு பாடலைக் காண்க.

“வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த

அந்தணனும் தனைவணங்கும் அவனும்அவன்

அடிவீழ்ந்தான்; தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுஉடையோர் சிங்தையினும் சென்னியினும்வீற்றிருக்கும் சீர்த்தியான்.' (கம்பன்-2334)

முதற்பாடலில் நாவாயில் ஒரு தனியேதான் வந்தான்' என்று முடியும் அடியைத் தொடர்ந்து இந்த அடி வருதலை நன்கு கவனித்துப் பொருள் கூற வேண்டும். குகன், எதிரே வந்து, இராமன் சென்ற திசையை நோக்கித் தொழுது கொண்டு நிற்கின்ற பரதனை வணங்கினான். மலரின்மேல் வாழ்கின்ற நான்முகனும் தன்னை வணங்கத் தகுந்த அப் பரதனும் அக்குகனுடைய அடியில் வீழ்ந்து வணங்கினான்.