பக்கம்:தம்பியர் இருவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தம்பியர் இருவர்

அவ்வாறு வணங்கிய பரதனை, மேலோர் சிந்தையிலும் சென்னியிலும் தங்கும்படியான மிக்க புகழையுடைய குகன் தந்தையைக்காட்டிலும் களி கூரத் தழுவிக்கொண்டான். இந்தப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடலை மீட்டும் படித்துப் பார்த்தால் இப்பொருள் எவ்வளவு நேராகச் செல்கிறதென்பது நன்கு விளங்கும்.

இவ்வளவு நேரான பொருளை மாற்றி, பரதன் காலில் குகனை விழுமாறு செய்து மகிழ்கின்ற பெரியார் களும் உண்டு. அப்பெரியார்கட்கு வேடனாகிய குகன் காலில் திருமாலின் பகுதியாகிய பரதன் வீழ்ந்து வணங்குவது பிடிக்கவில்லை. பாவம்! தங்களுடைய காதற் பித்தைப் பரதன் குகன் ஆகியவர்களிடங்கட ஏற்றிக் காணும் அவர்கள் கவிதையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் அல்லர்: அதற்கு மறுதலையாகத் தம்மைக் கவிதையில் ஏற்றி அங்கும் தம்முடைய விருப்பு வெறுப்புகளையே அனுபவிக்கப் பழகியவர்கள். ஆனால், மேலே கூறிய நேரிய பொருளைக் கூறியவர்களும் உண்டு என்பதை மறத்தல் ஆகாது.

இங்ங்ணம் பரதனைக் குகன்தான் தழுவிக் கொண் டான் என்பதை அடுத்த பாடலின் முதலடியும், தழுவின புளிஞர் வேந்தன்' என்று வலியுறுத்துகிறது. தழுவிய குகன் மெள்ளத் தன் மனத்தில் உள்ள ஐயத்தை அகற்றிக் கொள்ள விரும்புகிறான்; ஆனால், மிகுந்த பண்பாட் டுடன், எய்தியது என்னை? என்றுதான் கேட்கிறான். அதற்குப் பரதன் விடை கூறுவது குகனுடைய மனத்தின் மூலையில் ஒளித்து நிற்கும் ஐயத்தையும் நீக்கிவிடுகிறது.

முழுதுஉலகு அளித்த தந்தை முந்தையோர் - - . முறையினின்றும்

வழுவினன், அதனை நீக்க மன்னனைக்

கொணர்வான்’ என்றான்.