பக்கம்:தம்பியர் இருவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் . 55

இந்த விடையைக் கேட்ட குகன் எல்லையற்ற வியப்படைந் தவனாகி, மண்ணில் வீழ்ந்து வணங்கிப் பரதனுடைய கால்களைத் தழுவிக் கொள்கிறான். தூய்மையான அன்பினாலும் ஆர்வத்தாலும் குகன் இப்பொழுது பேசத் தொடங்குகிறான்.

‘ஐயனே, தாயின் வரத்தால் தந்தை உதவிய இந்த உலக அரசைத் தீவினை என்று கருதி ஒதுக்கிவிட்டு, அண்ணனை அடையாத கவலையை முகத்தில் காட்டிக் கொண்டு இங்கு வந்தனை என்றால், புகழை உடையோய், ஆயிரம் இராமர்கள் கூடினாலும் உனக்கு ஒப்பாவார் களா? ஏழை வேடனாகிய யான் எவ்வாறு உன் புகழைக் கூறப் போகிறேன்! சூரியனுடைய ஒளியானது ஏனைய ஒளிகள் அனைத்தையும் விழுங்கித் திகழ்வதுபோல, (தசரதன், இராமன் உள்ளிட்ட) இரகு குல வேந்தர்கள் பெருமை அனைத்தையும் உன் புகழாக்கிக் கொண்டாய்!” என்கிறான்.

'தாய்உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன கீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

‘ என்புகழ் கின்றது ஏழை எயினனேன்! இரவி என்பான்

தன்புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்கு

மாபோல் மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் பெருமை எல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத்து உரவுத் தோளாய் (கம்பன்-3337, 238)

13 * 参见

இப்பரந்த உலகில் பண்புடையாளரை எண்ணத் தொடங்கினால் அவருள் முதலில் வைத்து எண்ணப்பட வேண்டியவன் பரதனாவன். இராமனும் பெற முடியாத பெருமையைக் குகன் பரதனுக்குத் தந்து மகிழ்கிறான்;