பக்கம்:தம்பியர் இருவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தம்பியர் இருவர்

அதிலும், இதுவரையில் இலக்குவனுடைய சொற்களை நம்பிப் பரதனை வேறு விதமாக எண்ணியிருந்த குகன் முற்றிலும் மாறிவிட்டான்; பரதனுடைய பண்பாட்டை நேரே கண்டுவிட்டான்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை;

யாண்டும் அஃது ஒப்பது இல்.’

(திரு. 863)

என்ற அறநூல் இலக்கணத்திற்கு இலக்கியமாக அன்றோ அமைந்துவிட்டான் பரதன்! தந்தை சொன்ன காரணத் தால் அரசை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்ட இராமன் எங்கே! அதனை வேண்டா என மறுத்த பரதன் எங்கே! தனக்கு அதற்கு உரிமை உண்டா என்பதை ஆராய்ந்து பாராமல் அன்றோ இராமன் முடி சூட ஏற்றுக் கொண்டான்? அவன் அதை விரும்பவில்லை என்பது மெய்ம்மைதான். என்றாலும், தந்தை கேட்டவுடன் மறுத்துப் பேசாதது ஒரளவு குறைவுதானே?

பரதனுக்கு அயோத்தி அரசுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை நினைவூட்டினாள் தாய். அதனை உணர்ந்த தந்தை கொடுக்க முடிவு செய்துவிட்டான். விரும்பி ஈந்தானா, விரும்பாமல் தந்தானா என்பது வினாவன்று. உரிமை என்று அறிந்திருந்தும், அதனை ஒதுக்கிவிட்ட பரதன், அதனை ஏற்றுக் கொண்ட இராமனிலும் மேம் பட்டவன் அல்லனோ? இராமனுக்குத் தர வேண்டுவது கடமை-என்று விட்டிருந்தால், அதில் சிறப்பு இல்லை. ஆனால், தனக்கு உரிமை இல்லை என்று நினைத்தது மட்டும் அன்றி, அதனால் பெரிதும் கவலையுற்று, அக் கவலையால் முகம் மாறியிருக்கும் பரதனைக் காணக் காணக் குகன் பெருமை கொள்ளுகிறான். பரதனுடைய புகழ் இராமனுடைய புகழையும் விழுங்கி நிற்றலைக் காண்கிறான் அவ்வேடர் கோமான்.