பக்கம்:தம்பியர் இருவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 57

இதனை அடுத்துக் குகன் பரதனுக்கு இராமன் படுத்த இடம் முதலியவற்றைக் காட்டினான்; இறுதியாகப் பரத னுடைய படை முழுவதையும் அக்கரைக்கு ஏற்றிக் கொண்டுபோய் விட்டான்; அனைவரும் சென்ற பிறகு நடுப்பகலில் தசரதன் தேவியர் மூவரையும் பரதனுடன் ஏற்றிக்கொண்டு செல்லும்பொழுது பரதனைப் பார்த்துக் கோசலையைச் சுட்டி யார் இவர்?’ என்று கேட்கிறான். இன்னாள் என்பதை அறிந்த குகன் அவள் திருவடிகளில் வீழ்ந்து கதறுகையில் அவனைப் பற்றி அப்பெருமாட்டி வினவுகின்றாள். உடனே பரதன் அவளுக்கு விடை கூறுகிறான்:

'இன்துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான்.”

(கம்பன்-2367)

என்ற அடியால் குகனைப் பற்றிப் பரதன் கொண்டுள்ள எண்ணம் முற்றிலும் வெளியாகிறது.

இனிக் கைகேயியைப் பரதன் மிகக் கடுமையான முறையில் அறிமுகம் செய்து வைத்துங்கூடக் குகன் அவளையும் தாய் என நினைத்து வணங்கினானாம்.

கைகேயியை இன்னாள் என்று அறிந்ததும் அவளையும் கையால் வணங்கினான். என்பதை நோக்குகையில் குகன் பரதனுடைய பண்பாட்டிலும் ஒரு படி மேலே சென்றுவிடு கிறான். இராமனையே முதலிற்கண்டு, அவனிடமே அன்பு செலுத்திப் பழகியவன் குகன். இராமனுடைய சுற்றத் தாரை இன்று அவன் தன்னுடைய சுற்றத்தாராக மதிக் கிறான். எனில், அதற்கும் இராமனே காரணம். இராம னுடைய தாய் என்பதற்காகவும், அவனுடைய சோதரர் என்பதற்காகவுமே பிறரிடம் அவன் அன்பு பாராட்டு கிறான். இராமனுக்கு வேண்டாதவர் அனைவரும் குகனுக்கும் வேண்டாதவர்களே. அவனுக்குத் தீங்கிழைத் தவர் அனைவரும் குகனுக்கும் தீமை புரிந்தவரேயாவர்.