பக்கம்:தம்பியர் இருவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பரதன் எனும் பெயரான்'

'இராமாயணக் காப்பியத்தின் தலைவன் இராமன்தான் என்றால், இதில் என்ன புதுமை இருக்கிறது?’ என்று பலர் நினைக்கக் கூடும். அக் காப்பியத்தில் வரும் வேறு எந்தப் பாத்திரமும் இராமனளவு நம் மனத்தைக் கவரவில்லை என்ப தும் உண்மையே. நம்மைப்போல மனிதனாய்ப் பிறந்த ஒருவன் பண்பாட்டால் உயர்ந்து, உயர்ந்து கடவுள் தன்மையை எய்திவிடுகிறான். கம்பநாட னுடைய சித்திரம் ஏறத்தாழ இந்த நிலையிலே தான் இருக்கிறது. எனவே, இராமனை ஒத்த மற்றொரு பாத்திரத்தை அப்பெருநூலில் காண் டல் அரிது.

என்றாாலும், இராமனுடன் பெரும்போட்டி இட்டு அவன் பெறும் இடத்தையும் பெற்றுவிட்டான் என்று கூறக் கூடிய மற்றொரு பாத்திரத்தையும் கம்பநாடன் படைத் துள்ளான். இன்னும் கூறப்போனால், இராமனிலும் மேம் பட்டவன் என்று பலராலும் பாராட்டப்பட்ட பெரு மையை உடையவன் இராமாயண முழுவதிலும் ஒருவனே உளன். இராமனுடைய செயல்கள் அனைத்தையும் ஒவ் வொன்றாக எடுத்து அலசிப்பார்த்தால், அச்செயல் ஒவ் வொன்றிலும் அவனுடைய பண்பாடும் கருணையும் வெளிப்படக் காணலாம். ஆனால், அவனுடைய சில செயல் களின் உட்கருத்தை நம் போன்றோர் அறிய முடிவதில்லை.