பக்கம்:தம்பியர் இருவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 6 芯

மானாய் வந்தது உண்மையில் பொன்மான் அன்று. என்பதை அறிந்திருந்தும், சீதையின் வேண்டுகோட்காக இராமன் அதன் பின்னே சென்ற செயலையும், சூர்ப்பநகை இராவணனுடைய தங்கை என்பதை அறிந்திருந்தும் அவளை ஒட்டிவிடாமல் அவளுடன் விளையாட்டாகப் பேசி அவளுடைய நம்பிக்கையை வளர்த்த செயலையும், வாலியை மறைந்து நின்று கொன்ற செயலையும் நம் போன்றார் எளிதில் அறியக்கூடவில்லை. பெரியோர்கள் இவற்றிற்கெல்லாம் தக்க முறையில் சமாதானம் கூற முயன்றும், பலர் சமாதானம் அடைய மறுக்கின்றனர். இவை மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டவை என்று கூறினால் ஒழிய, இவற்றிற்குத் தக்க விடை கூற முடியும் எனத் தோன்றவில்லை.

இத்தகைய ஐயத்திற்கிடமான செயல் ஒன்றையும் செய்யாத ஒரு பாத்திரத்தைப் படைக்க முயன்று படைத் தும் விட்டான் கவிஞன். அப்பழுக்கு அற்றவனும், மனிதப் பண்பாட்டின் முடியாய் விளங்குபவனும், பகைவனும் குறை கூற முடியாத பண்பாடுடையவனும் ஆகிய ஒரு பாத்திரத் தைப் படைத்துவிட்டான் கவிஞன். கவிதை உலகின் ஒப்பற்ற படைப்பாவான் பரதன். ஆற்றல்சால் கோசலை என்று புகழப்படும் முதல் தேவி கோசலையும் புகழ்கிறாள் பரதனை காப்பியத் தலைவனாகிய இராமனே வாயாரப் புகழ்கிறான் அச்செம்மலை! கல்வி வாசனையற்ற குகனும் புகழ்கிறான் அத்தோன்றலை! கல்விக் கடலின் கரைகண்ட சொல்வின் செல்வனாம் அனுமனும் புகழ்கிறான் அவ் வள்ளலை! அவையோர் புகழ்கின்றனர்! இம்மட்டோ! பரதனை ஆதி முதல் தவறாகவே உணர்ந்திருந்த இலக்கு. வனும் இறுதியில் தன் பிழைக்கு இரங்கிப் புகழ்கிறான் அவ்வருமைத் தம்பியை!

இவ்வாறு அனைவராலும் ஒருசேரப் புகழ்மாலை சூட்டப் பெறும் பேறு அப்பெருங்காப்பியத்தில் வேறு