பக்கம்:தம்பியர் இருவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 6.3

அஞ்ஞானமாகிய அகவிருளையும் ஒரு சேர ஒட்டிய பரதன் என்னும் பேரொளி தோன்றிற்று என்றான் கவிஞன். எத் துணைப் பொருத்தம்! திரி கருமை உடையதுதான்; ஆனால், திரியைப்பற்றி நிற்கும் ஒளி இருள் போக்குகிறது. பரதனும் கருமை நிறம் உடையவன்தான்; ஆனால் அவனைப் பற்றி நின்ற பண்பாடு, சால்பு என்பவை உல கிருளை ஒருசேர ஒட்டிவிட்டன. இதனை மனத்துட் கொண்டுதான் போலும் மற்றைய ஒளி என்கிறான் கவிஞன்!

ஆதியிலிருந்தே இராமனுடன் இலக்குவனும் பரதனும் சத்துருக்கனனும் இணைபிரியாதிருந்து விட்டனர். அரச குமாரர் அனைவரும் ஒரே ஆசிரியனிடத்துக் கற்றன ராகவின், பிற்காலத்தில் இவர்களின் வாழ்க்கையில் காணப் பெறும் தனிப் பண்பாடுகள் இயற்கையாய் அமைந்தவை களே என்று கருதுவதில் தவறு இல்லை. -

விருப்பு வெறுப்புக்களால் கட்டுண்ணாத விசுவா மித்திர முனிவன் சனகனிடம் பேசுகிறான். இராமனும் இலக்குவனும் உடன் இருக்கின்றனர். இராமனுடைய பெருமையைக் கூறிய முனிவன், எதிரே இல்லாமல் அயோத்தியில் வாழும் பரதனைப் பற்றிப் பேசுகிறான் சனகனிடத்தில். இராமனை ஒத்த நிறமுடைய ஒரு தம்பி யும் உண்டு ஊரில் என்று கூறிப் போயிருக்கலாம் அம் முனிவன். ஆனால், பரதனைப் பற்றி நினைத்தவுடனே விசுவாமித்திரன் மனம் குளிர்ந்துவிடுகிறது. ஆம்! பரதன் என்ற சொல்லும் அறம்' என்ற சொல்லும் ஒரே பொரு ளுடையன என்கிறான் தவத்தால் மேம்பட்ட அம்முனிவன்! அறிந்தவர்களும் விளக்க முடியாத சிறந்த நீதிகள் என்னும் ஆறுகள் வந்து மண்டும் கடல் போன்றவனும், பரதன் என்னும் பெயருடையவனும், இவ்விராமனை நிறத்தாலும் குணத்தாலும் ஒத்தவனுமாகிய ஒருவனைக் கைகேயி பெற்றெடுத்தாள், என்று சனகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். -