பக்கம்:தம்பியர் இருவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

始尖 தம்பியர் இருவர்

'தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்

பள்ளம்எனும் தகையானைப் பரதன்னனும் பெயரானை எள்ளரிய குணத்தாலும் நிறத்தாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர்கோன் மகள் பயங்

தாள்.' (கம்பன்-6:57)

2.

பரதனைப் பற்றி நினைந்தவுடன் அம்முனிவனுக்கு நீதி யாறுகள் வந்து புகும் கடலேதான் உவமையாக எதிரே நிற்கின்றது. பரதனை அவன் அறக்கடல்' என்றுதான் கூறுகிறான். விருப்பு வெறுப்பற்ற முனிவனாலும் இவ்வாறு புகழப்படும் வாய்ப்பு வேறு யாருக்குத்தான் கிடைக்கும்;

தசரதன் கண்ட பரதன்

இத்துணைச் சிறப்பு வாய்ந்த பரதனைப்பற்றி இராம காதையில் பிறபாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்று காண்பது பயனுடைய செயலாகும். முதலாவது பேச உரிமையுள்ளவன் தசரதனேயாவான். அவன் ஒருதலைப் பக்கமான விருப்பமுடையவனாகலின், அவனுடைய சொற்களைக் கொண்டு பரதனைப் பற்றி முடிவு செய்தல் ஆகாது என்பதை மனத்தில் இருத்திக்கொண்டு, அவன் சொற்களைக் காண்டல் வேண்டும். கைகேயியிடம் பேசும் மன்னவன் முதலில் மகிழ்ச்சியோடும் பின்னர்த் துயரத்தோடும் பேசுகிறான். எனவே, முதலில் இராமனை 'உன் மைந்தன்' என்று குறிப்பிடுகிறான்; அடுத்துக் கோபம் வந்த நிலையில் அவனை என் மகன்’ என்றும் பேசுகிறான். இவ்வாறு பேசும் அம்மன்னன் மறந்தும் பரதனை என் மகன்’ என்றோ, நம் மகன்’ என்றோ கூறாதது வியப்பே! கைகேயி விருப்பப்படியே தான் அரசை அளித்தாலும் பரதன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று மட்டும் கூற அவனுக்கு எவ்வாறு எண்ணம் வந்ததோ, தெரியவில்லை! :கொள்ளான் கின்சேய் இவ்வரசு’ என்று கூறும் பொழுது பரதனைப் பற்றி இயல்பாகவே ஒரு நல்ல எண்ணம் அவன்