பக்கம்:தம்பியர் இருவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 65

மனத்தில் இருந்ததை அறிய முடிகிறது. என்றாலும், பரதனைக் குறிப்பிடும் இடத்தில் நின்சேய்' என்றது அவன் பரதன் மேற்கொண்ட அன்பு எத்தகையது என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு!

கைகேயி அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டுத் தான் வேண்டிய வரங்களைக் கொடுத்தே தீரவேண்டும் என்று யிடிவாதம் பிடிக்கிறாள். தப்ப வேறு வழியே இல்லை என்பதைக் கண்ட மன்னன், மிகவும் ஆத்திரத்துடன் வரங்களில் ஒன்றைத் தருவதாகக் கூறு கிறான்; ஒரே பாடலில் பரதனையும் இராமனையும் குறிக் கிறான். ஆனால், எவ்வளவு வேற்றுமை!

' கின்மகன் ஆள்வான், t இனிது ஆள்வாய் கிலம்எல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி தந்தேன்; உரை குன்றேன் என்மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும் கன்மகன் இந்த நாடுஇற வாமை கய!’ என்றான்.

(கம்பன்-1526)

பரதனைக் குறிக்கும் பொழுது நின்மகன்' என்றும், இராமனைக் குறிக்கும் பொழுது என் மகன்' என்றும் கூறுகிற தந்தையிடம் பரதனைப் பற்றிய செம்மையான கருத்துக்களை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை யடுத்து அவன் பரதனைத் தன் மகன் அல்லன் என்றும் தனக்கு இறுதிக்கடனை அவன் செய்யக்கூடாது என்றும் கூறிவிடுகிறான். -

'மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும்

மகன் என்று உன்னேன் முனிவா!'

(கம்பன்-165:4)

எனப் பரதன்மேல் இவ்வளவு சினங்கொள்ளத் தசரதனுக்கு நியாயமே இல்லை என்பதை நாம் அறிவோம். ஆகலின், த.-5 -